states

மங்களூரு கர்நாடகாவில் வங்கதேசத்தவர் என்று கூறி ஜார்க்கண்ட் தொழிலாளி மீது இந்துத்துவா குண்டர்கள் தாக்குதல்

மங்களூரு கர்நாடகாவில் வங்கதேசத்தவர் என்று கூறி ஜார்க்கண்ட் தொழிலாளி மீது இந்துத்துவா குண்டர்கள் தாக்குதல்

பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப் பற்றியது. இந்த வெற்றிக்குப் பிறகு நாடு முழுவதும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம், விஎச்பி உள்ளிட்ட அமைப்பு களின் இந்துத்துவா குண்டர்கள் முஸ்லிம்,  தலித் மற்றும் புலம்பெயர்ந்த தொழி லாளர்கள் மீது வங்கதேசத்தவர் என்று வகுப்பு வாத கண்ணோட்டத்துடன் முத்திரை குத்தி  தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்துத்துவா குண்டர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல்  நடத்தினர். தற்போது கர்நாடகாவிலும் இத்தகைய  தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூருவில் தில்ஜான் அன்சாரி என்ற முஸ்லிம் இளைஞர் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார். அங்கு பணிபுரிந்து வரும் இவருக்கு கன்னட மொழி சரளமாகப் பேசத் தெரியும். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு இந்துத்துவா குண்டர்கள் 4 பேர் தில்ஜானை வழிமறித்துத் தாக்கியுள்ளனர். அவர்கள் அன்சாரியிடம்,”நீ வங்கதேசத்தவர் தானே?” என்று அவரது ஆதார் அட்டையைக் கேட்டு மிரட்டியதோடு,“ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கமிடுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாகக் குலூரைச் சேர்ந்த சாகர், தனுஷ், ரதீஷ் தாஸ், மோகன்  ஆகிய 4 பேரை காவல்துறையினர் அடை யாளம் கண்டுள்ளனர். இவர்களில் ரதீஷ் தாஸ், தனுஷ், சாகர் ஆகிய மூன்று பேர் இது வரை கைது செய்யப்பட்டுள்ளனர். தலை மறைவாக உள்ள மோகனை தேடும் பணியில் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.