tamilnadu

img

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக நாடு முழுதும் உள்ள மக்களை அணிதிரட்டுவோம்!

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக நாடு முழுதும் உள்ள மக்களை அணிதிரட்டுவோம்!

சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர்கள் உறுதிமொழி திருவனந்தபுரம், ஜன.16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக் குழுக் கூட்டம் திரு வனந்தபுரத்தில் உள்ள இஎம்எஸ் அகாடமியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்திற்கு பி.வி. ராகவலு தலைமை ஏற்றார். பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி அரசியல் நிகழ்ச்சிப் போக்குகள் தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்தார். இந்தக் கூட்டத்தில், மத்தியக் குழு உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். உறுதிமொழி அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழி வருமாறு: “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாகிய நாங்கள், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதியான இன்று, பெருந்திரளான மக்களுடன் இணைந்து நின்று, பாஜக தலைமையிலான தேசிய  ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் விவசாயத் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, தொழிலாளர் கள் விரோத, மக்கள் விரோத சட்டங் கள் மற்றும் கொள்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் வரை, அவற்றை எதிர்த்துப் போராட ஒன்றுபட்டு செயல்படுவோம் என்று தீர்மானிக் கிறோம். மக்களின் ஒற்றுமைக்காக உழைப்போம் என்றும், மக்களின் அடிப்படை உரிமைகளையும் கண்ணி யமான வாழ்க்கையையும் உறுதி செய்யும் மக்கள் நலச் சட்டங்களும் கொள்கைகளும் உருவாக்கப்படு வதை உறுதி செய்வோம் என்றும் நாங்கள் உறுதிமொழி ஏற்கிறோம்.” இவ்வாறு அவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.       (ந.நி.)