தொழிற்சங்க முன்னோடி தோழர் ஏ.ரைமண்ட் மறைவு
சென்னை,ஜன.16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செய லாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு: தமிழ்நாடு அரசு விரைவு போக்கு வரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், தலை சிறந்த தொழிற்சங்க தலைவர்களில் ஒருவருமான தோழர் ஏ.ரைமண்ட் உடல்நலக்குறைவால் 15.01.2026 அன்று காலமானார். அவரது மறை வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், புகழஞ்சலியையும் செலுத்துகிறது. கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல், கொட்டில்பாடு என்ற கிரா மத்தில் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியிருந்த ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த தோழர் ரைமண்ட் 1964ல் மெட்ராஸ் ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மெண்ட்டில் நடத்துநராக வேலையில் சேர்ந்தவர். சிஐடியு தலைமையில் செயல்படும் போக்கு வரத்து தொழிலாளர்கள் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு போக்கு வரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக மட்டு மல்லாமல், பொதுத்துறை நிறுவன மான போக்குவரத்து துறையை பாது காப்பதிலும், நிர்வாகம் மேற்கொள்ளும் பழிவாங்கும் போக்குகளை எதிர்த்தும் வீரமிக்க போராட்டங்களை மேற்கொண்டவர். இதனால், 2 ஆண்டு கள் தற்காலிக வேலை நீக்கம், 7 ஆண்டுகள் ஊதிய இழப்பு, கைது, சிறை போன்ற அடக்குமுறைகளை உறுதியாக எதிர்கொண்டவர். தமிழ்நாடு அரசு விரைவுப் போக்கு வரத்து தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராக பணியாற்றிய காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சிஐடியு அமைப்பை சக்திவாய்ந்த அமைப்பாக கட்டுவதில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்டக்குழு உறுப்பினர், விரைவுப் போக்கு வரத்து தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றி யவர். ஓய்வுபெற்ற பிறகு, ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், தொழிற்சங்க இயக்கத்திற்கும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உற வினர்களுக்கும் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த அனு தாபத்தையும், ஆறுதலையும் தெரி வித்துக் கொள்கிறது.
