உ.பி.யில் அத்துமீறல் : வீட்டுக் காவலுக்காக படுக்கை அறைக்கு சென்ற காவல்துறையினர்
பாஜக ஆளும் உத்தரப்பிர தேச மாநிலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களுக்கு எதிராக இந்திய தேசிய மாணவர் சங்கத்தினர் (NSUI) செவ்வாய்க்கிழமை அன்று போராட்டம் நடத்தினர். மாநிலம் முழுவதும் போராட்டம் நடை பெற்றது. இந்த போராட்டத்திற்கு முன் பாகவும், போராட்டத்திற்கு பிறகும் வார ணாசி, ஜான்பூர், மிர்சாபூர் மற்றும் மவ் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மாணவர் சங்க நிர்வாகிகள் திங்கள் (பகல் முதல்) மற்றும் செவ்வாய்க்கிழமை (நள்ளிரவு முதல்) முதல் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி புதனன்று மாலை வரை மாணவர்களை காவல்துறை வெளியே செல்ல அனு மதிக்கப்படவில்லை. இதனால் நாடு முழுவதும் கண்டனங்கள் கிளம்பி யுள்ளன. வீட்டுக்காவலுக்கு வந்த சோதனை வீட்டுக்காவல் என்றால் வீட்டை பூட்டி அல்லது வீட்டில் இருக்கும் நபர்களை வெளியேறாமல் பார்த்துக் கொள்வதே வீட்டுக் காவல் ஆகும். ஆனால் இந்திய தேசிய மாணவர் சங்கத்தினரை வீட்டுக் காவலில் வைக்க காவல்துறையினர் வீட்டில் படுக்கை அறைக்கே சென்று, மாணவர்களை காவலில் வைத்தது. இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக புகைப்படமும் வெளியாகியுள்ளது. இந்திய தேசிய மாணவர் சங்க நிர்வாகி ஒருவர் இந்நிகழ்வை செல்பி எடுத்து சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்.