விளிம்பு நிலை மக்களின் நம்பிக்கை செங்கொடி!
உடுமலை வனச்சரக அலுவ லகத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த மாரிமுத்து மரணத்தில் உண்மை யான விசாரணை நடத்த வேண்டும் என வனத்துறை அலுவலகத்தை முற்று கையிட்டு போராட்டம் நடத்தியது மு தல் திருப்பூர் அரசு மருந்துவமனையில் உடலை பெறும் வரையில் உடனிருந் தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மலைவாழ் மக்கள் சங்கம் மட்டும் தான் என மலை வாழ்மக்கள் உணர்ச்சி பொங்க கூறுகின்றனர். மர்ம மரணம்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரக அலுவலகத்திற்கு, புலி பல் வைத்திருந்ததாக மேல் குருமலை குடியிருப்பில் வசித்துவந்த பழங்குடி யினத்தை சேர்ந்த மாரிமுத்து கடந்த ஜூ லை 30 ஆம் தேதி விசாரணைக்காக வனத்துறை அலுவலகம் அழைத்து வரப்பட்டார். ஜூலை 31ஆம் தேதி காலையில் மாரிமுத்து கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வனத்துறையினர் கூறினர். இதையடுத்து உடுமலை வருவாய் கோட்டாட்சியர், உடுமலை காவல்துறை துணை கண்கா ணிப்பாளர் உள்ளிட்டோர் சம்பவ இடத் திற்கு வந்தனர். மாரிமுத்துவின் உடலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு தனியார் ஆம்பு லன்ஸ் கொண்டு வரப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்: உடுமலை வனச்சரக அலுவல கத்தில் பழங்குடியினத்தவர் உயிரிழந்த தகவல் கிடைத்தவு டன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் உடுமலை நகரச்செயலாளர் தண்டபாணி, வழக்கறிஞர் பாலசுப் பிரமணியம் உட்பட கட்சியினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மாரிமுத்துவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது, அவ ரின் மனைவி மற்றும் மகள்கள் வரும் வரை உடலை எடுக்ககூடாது என்று வனச்சரக அலுவலகத்தின்முன்பு கட்சி கொடியுடன் முற்றுகையிட்டு போராட் டம் நடத்தினர். காவல்துறை குவிப்பு: அடித்தாலும், கொன்றாலும் யாரும் கேட்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் தொடர்ச்சியாக மலை வாழ் மக்களைத் துன்பப்படுத்திய வனத்துறையினர், இந்த மரணத்தை காவல்துறையை வைத்து சரி கட்டிவிட லாம் என்ற எணத்தில் இருந்தவர்க ளுக்கு செங்கொடியின் போராட்டம் பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியது. உடுமலை துணை காவல்துறை கண்கா ணிப்பாளர் அனைத்து காவல் நிலை யத்தில் இருந்தும் காவலர்களை வரவ ழைத்து போராட்டம் நடத்திய மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை மிரட்டி னார். மேலும் அங்கு இருந்த செய்தி யாளர்களை வனத்துறை அலுவல கத்தில் இருந்து வெளியேற்றவும் முயற்சி செய்தார். செங்கொடியின் போராட்டத்தினால் காவல்துறை அடக் குமுறை பின்னுக்குத் தள்ளப்பட்டது. வருவாய் மற்றும் காவல்துறை பேச்சுவார்த்தை: விசாரணைக்கு அழைத்து வந்த மாரிமுத்துவின் குடும்பத்தினர் வரும் வரை உடலை எடுக்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் எ திர்ப்பு தெரிவித்தனர். மேலும், மாரி முத்து கைது குறித்து குடும்பத்தின ருக்கு எவ்வித தகவலும் தெரிவிக்கப் படவில்லை. விசாரணைக்கு அழைத்து கொலை செய்துள்ளதாக சந்தேகம் உள்ளது. எனவே வனத்துறை அதிகா ரிகள் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை சட்டத் தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக விசாரணையின் போது அடித்து கொலை செய்யப் பட்டார் என்பது உள்ளிட்ட பிரிவு களில் வழக்கு பதிவு செய்தால் மட்டுமே உடற்கூறாய்வுக்கு அனுமதிப்போம் என்று தெரிவித்தனர். பின்னர் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த மாரிமுத்துவின் மனைவி பாண்டியம்மாள், மகள்கள் சிந்து, ராதிகா மற்றும் மலைவாழ் மக்க ளும் போராட்டத்தில் கலந்து கொண் டனர். பின்னர் மாரிமுத்து மரணம் தொடர்பாக உடுமலை காவல்துறை, விசாரணையின்போது மரணம்- 196 (2)எ என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து. இந்த வழக்கில் முறை யாக அனைத்து விசாரணையும் செய் யப்படும் என்று உத்தரவாதம் தரப்பட் டது. இதையடுத்து உடற்கூறாய்வு செய்ய திருப்பூர் அரசு மருத்துவ கல் லூரி மருத்துவமனைக்கு மாரிமுத்து வின் உடல் கொண்டு செல்லப்பட்டது. உடுமலை வனச்சரக அலுவலகத் தில் வியாழக்கிழமை மாலையில் உடு மலை ஜே.எம்.1 நீதிமன்ற நீதிபதி நித்ய கலா சம்பவ இடம் மற்றும் அலுவலகத் தில் மாலை முதல் நள்ளிரவு வரை விசா ரணை நடத்தினார். போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்: மர்ம மரணம் அடைந்த மாரிமுத்து, அவரது குடும்பத்துடன் கேரள மாநிலம் மறையூர் பகுதியான சூரிய நெல்லியில் வசித்து வந்ததால், இவரின் மரணம் குறித்த செய்தி கேட்டு ஐநூறுக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வெள்ளிக் கிழமை காலை முதல் உடுமலை வனச் சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேவி குளம் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, கட்சியின் மறையூர் ஏரியா கமிட்டி செயலாளர் சிஜீமோன், காந்தலூர் ஊராட்சி மன்ற தலைவர் மோகன்தாஸ் மற்றும் சந்திரன் இந்திரஜித், கார்த்தி மற்றும் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் பஞ்ச லிங்கம், உடுமலை நகரச் செயலாளர் தண்டபாணி உள்ளிட்ட கட்சியினர் பலர் காலை முதல் நடைபெற்ற போராட் டத்தில் கலந்து கொண்டனர். மருத்துவமனையில் போராட்டம்: பழங்குடியினத்தை சேர்ந்த மாரி முத்துவின் மரணத்திற்கு நீதி வேண் டும் என திருப்பூர் அரசு மருத்துவ மணையின் முன்பு கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.ஆர். மதுசூதணன், நந்தகோபால், மணிகண் டன் உள்ளிட்ட பலர் காலை முதல் முற்றுகையிட்டு போராட்டம் நடத் தினர். இதையடுத்து நீதிபதி, மருத்துவர் கள், கோட்டாட்சியர் மற்றும் மலை வாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலா ளர் செல்வம் முன்னிலையில் நடை பெற்ற உடற்கூறாய்வின் அறிக்கை நிர்வாகிகளிடம் தரப்பட்டது. மேலும் தவறு செய்த அனைத்து வனத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக் கப்படுவதுடன், சரியான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரி விக்கப்பட்டது. இதையடுத்து, போராட் டம் முடிவுக்கு வந்தது. பின்னர் மாரிமுத் துவின் உடல் மறையூருக்கு கொண்டு செல்லப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்: மாரிமுத்து விசாரணையில் இறந் தது குறித்து உடுமலை வனச்சரக அலுவலகத்தில் வேலை செய்யும் வன வர் நிமல் மற்றும் வனக்காவலர் செந் தில்குமார் ஆகிய இரண்டு அதிகாரி களை பணியிடை நீக்கம் செய்தும், மேலும் ஒரு வனச்சரக அலுவலர் பணி யிட மாற்றம் செய்யப்பட்டும் உள்ள தாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப் பட்டது. மக்களின் ஒரே நம்பிக்கை சிபிஎம் சமூக ரீதியாகவும், அரசு ரீதியா கவும் எளிய மற்றும் விளிம்பு நிலை மக்கள் பாதிக்கப்படும்போது செங் கொடி இயக்கம் அந்த பிரச்சனை யில் தன்னை முழுமையாக இணைத்து கொண்டு அவர்களுக்கு நீதி கிடைக் கும் வரை போராடும் இயக்கமாக உள் ளது. இந்நிலையில் உடுமலையில் இருக்கும் 18 மலைவாழ் மக்கள் குடியி ருப்பு மக்களின் அடிப்படை பிரச்சனை களுக்கும், இம்மக்களுக்கு பழங்கு டியின சான்று தர வேண்டும் என தொடர் போராட்டம் நடத்தியுள்ளது. குறிப் பாக மலைவாழ் மக்களுக்கு உள்ளாட் சியில் வாக்குரிமை பெற்றுதரப்பட்டது. இதனால் திருமூர்த்திமலை மற்றும் குருமலையில் வெற்றி பெற்று, தற் போது தளி பேரூராட்சியில் துணை தலைவராக மலைவாழ் மக்கள் பிரதி நிதி இருப்பதற்கு கட்சியின் போராட்டங் களே காரணம். மேலும் அனைத்து மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிக ளுக்கும் சாலை வசதி, கான்கிரீட் வீடு கள் மற்றும் பள்ளிகள் குறித்து தொடர் போராட்டம் நடத்தியதால், மலை வாழ் மக்களின் நம்பிக்கை நட்சத்தி ரமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. இதனால் மாரிமுத்து வழக்கிலும் தவறு செய்த வனத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து உரிய நீதி கிடைக்க மார்க் சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும். மலைவாழ் மக்களை தாக்கினால் கேட்க யாரும் வர மாட்டார்கள் என்ற அதிகார போதையில் பல ஆண்டு காலம் தொடர்ச்சியான தாக்குதலை நடத்திய வனத்துறையினருக்கு, மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்தின் போராட்டத்ததால் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மலைவாழ் மக்கள் தெரிவித் தனர். -உடுமலை மகாதேவன்