வன மகசூலை பஞ்சாயத்தின் மூலம் அரசு கொள்முதல் செய்ய வேண்டும்
மலைவாழ் மக்கள் சங்க மாநாடுகள் வலியுறுத்தல்
நாமக்கல், செப். 7- வன மகசூலை பஞ்சாயத்தின் மூலம் அரசே நேரிடையாக கொள் முதல் செய்ய வேண்டும் என தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்ட மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட 4ஆவது மாநாடு கொல்லிமலை செம்மேடு வல்வில் ஓரி அரங்கத்தில் சனியன்று நடை பெற்றது. சங்கத்தின் மூத்த தலை வர் எஸ்.கே.ஆண்டி கொடியேற்றி னார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கே.மாணிக்கம் அஞ்சலி தீர்மா னத்தை முன்மொழிந்தார். மாவட்ட துணைச் செயலாளர் ஏ.பழனிச்சாமி வரவேற்றார். மாநாட்டை, தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு துவக்கி வைத்து உரையாற்றினார். செயல் பாட்டு அறிக்கையை செயலாளர் கே.சின்னசாமி முன்வைத்தார். மாநாட்டை வாழ்த்தி, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டச் செய லாளர் பி.பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. டி.கண்ணன் ஆகியோர் பேசினர். இம்மாநாட்டில் 29 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. தலைவ ராக எஸ்.கே.மாணிக்கம், செயலா ளராக கே.சின்னசாமி, பொருளாள ராக சி.ரேவதி, மாவட்ட துணைத் தலைவர்களாக எஸ்.தங்கராசு, கே. வி.ராஜ், ஏ.பழனிச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர்களாக எஸ்.நர் மதாதேவி, வீ.சி.பழனிச்சாமி, எஸ். ராஜேந்திரன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் ஏ.பொன்னுசாமி நிறைவுரையாற் றினார். முடிவில், சங்கத்தின் கொல்லிமலை தாலுகா தலைவர் சி. ரேவதி நன்றி கூறினார். தருமபுரி தருமபுரி மாவட்ட 7ஆவது மாநாடு அரூரில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஏ.அம்புரோஸ் தலைமை வகித்தார். மூத்த தோழர் வாச்சாத்தி பரந்தாயி சங்கக் கொடி யேற்றினார். மாநில துணைச் செயலா ளர் ஏ. கண்ணகி வரவேற்றார். சித் தேரி மலை கமிட்டி செயலாளர் ஏ. தேவேந்திரன் அஞ்சலி தீர்மா னத்தை வாசித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சோ. அருச் சுனன் துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் கே. என். மல்லையன் வேலை அறிக்கை வாசித்தார். மாவட்டப் பொருளாளர் எல். வெங்கட்ராமன் வரவு செலவு கணக்கை சமர்பித்தார். குருமன்ஸ் பழங்குடியினர் நலச் சங்க மாவட்டத் தலைவர் சி. சொக் கலிங்கம், சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் தி.வ.தனுசன் வாழ்த்திப் பேசினார். மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன் நிறை வுறையாற்றினார். இம்மாநாட்டில், மாவட்டத் தலைவராக எஸ்.அண்ணாமலை, செயலாளராக கே.என்.மல்லை யன், பொருளாளராக அ.சந் தோஷ், துணைத் தலைவர்களாக ஏ. அம்புரோஸ், சி.சொக்கலிங்கம், கே. அன்பு, மாவட்ட துணைச் செய லாளர்களாக பழனிச்சாமி, மாரி முத்து, செல்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் இதில், 2006 வன உரிமைச் சட்டப் படி பழங்குடி மக்கள் அனுபவத்தில் உள்ள வன நிலங்களுக்கு உரிமை சான்று வழங்க வேண்டும். கொல்லிமலையில் விளையும் மிளகு, அன்னாச்சி, காப்பி, பலா, வாழை, குச்சிகிழங்கு பொருட் களை மதிப்பு கூட்டப்பட்ட பொரு ளாக அறிவிக்க வேண்டும். பழக் குடியினர் நலவாரியத்தை முறை யாக செயல்படுத்த வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பயன் படுத்தப்பட்ட சேளூர் நாடு, குழிப் பட்டி முதல் எருமைப்பட்டி வரை செல்லும் குதிரை ரோட்டை தார் சாலையாக அமைக்க வேண்டும். பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்படு கின்ற நிதியை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். வன உரிமைச் சட்டப்படி பழங்குடியின மக்கள் வனத்தில் சிறு மகசூல் சேக ரித்துக் கொள்ளவும், ஆடு, மாடு மேய்த்துக்கொள்ள மேய்ச்சல் உரிமையும் வனத்துறையினர் தடுக்கக் கூடாது. தடுக்கும் வனத் துறை அதிகாரிகள் மீது உரிய கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள மலசர், காட்டுநாயக்கர் பழங்குடி மக்கள் அனைவருக்கும் சாதிச் சான்றிதழ் வழங்கவேண்டும். 1989 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்திரா நினைவுக்குடியிருப்புகள் பழுதடைந்துள்ள நிலையில் அங் குள்ள அனைத்து வீடுகளுக்கும் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். மலைவாழ் மக்கள் தொகுப்பு வீடு கட்ட வழங்கப்படும் நிதி ரூ.10 லட்சத்தை உறுதி செய்ய வேண் டும். படித்த பழங்குடி இளைஞர்க ளுக்கு முழு மானியத்துடன் பொரு ளாதார கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.