போலி கொரோனா சான்று வழங்கி மோசடி பரிசோதனை மைய ஊழியருக்கு சிறை
கோவை, ஆக.22– போலி கொரோனா சான்று வழங்கி மோசடி செய்த பரிசோதனை மைய ஊழிய ருக்கும், அவருக்கு உடந்தையாக இருந்த பெண்ணுக்கு மூன்று ஆண்டு சிறை தண் டனை வழங்கி கோவை நீதிமன்றம் தீர்ப்ப ளித்துள்ளது. கோவை, பீளமேடு பகுதியில் ஒரு மருத் துவ பரிசோதனை மையம் செயல்பட்டு வந் தது. அங்கு கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா பாதித்தவர்களுக்கு பரிசோ தனை செய்து மருத்துவ அறிக்கை கொடுத்து வந்தனர். இந்த மையத்தில் பரிசோதனை பிரிவு ஊழியராக வடவள்ளி தில்லை நகரைச் சேர்ந்த கௌசிகன் என்பவர் வேலை செய்து வந்தார். அந்த மையம் மூலம் போலியாக கொரோனா மருத்துவ பரிசோதனை சான்று கொடுப்பதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்க கௌசிகன் திட்டமிட்டார். இதற்காக அவர் எந்தவித அங்கீகாரமுமின்றி ஒரு பரிசோ தனை மையத்தை தொடங்கினார். அங்கு வீர கேரளத்தைச் சேர்ந்த உமாதேவி என்பவர் வேலை பார்த்து வந்தார். இதை அடுத்து கௌசிகன் தான் ஏற்கனவே வேலை பார்த்த பரிசோதனை மையத்தின் முத்திரை மற்றும் சான்றுகளை போலியாக பயன்ப டுத்தி அதிக பணம் ஈட்டியுள்ளார். இந்நிலையில், கௌசிகன் ஏற்கனவே வேலை பார்த்து பரிசோதனை மைய உரிமை யாளர் தனது மையத்தை தவறாக பயன்ப டுத்தி வருவதை அறிந்து அதிர்ச்சி அடைந் தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் கூட்டுச் சதி, மோசடி உள்ளிட்ட பல்வேறு சட் டப் பிரிவுகளில் கவுசிகன், உமாதேவி ஆகி யோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை 4 வது குற்றவி யல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அருண்குமார் குற்றம் சாட்டப்பட்ட கௌசிகன், உமாதேவி ஆகியோ ருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார்.