ததீஒமு கலைப்பயணத்திற்கு எழுச்சி வரவேற்பு
ஈரோடு, ஆக.20- தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில மாநாட்டு கலைப் பிரச்சாரப் பய ணத்திற்கு அந்தியூரில் எழுச்சிகர வர வேற்பளிக்கப்பட்டது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் 5 ஆவது மாநில மாநாடு, மயி லாடுதுறையில் வரும் ஆக.31, செப்.1 ஆகிய இரு தினங்களில் நடைபெறு கிறது. அதனையொட்டி சென்னை கலைக்குழுவின் பிரச்சார பயணம் பிரள யன் தலைமையில் ஈரோடு மாவட்டம், அந்தியூருக்கு புதனன்று வந்தடைந் தது. ரவுண்டானா பகுதியில் அமைப் பின் தலைவர் ராஜா தலைமையில் எழுச்சிகர வரவேற்பளிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் ஆர்.ரகுராமன் கலைநிகழ்ச்சி களை தொடங்கி வைத்தார். பட்டாங் கில் உள்ளபடி மற்றும் மெய் ஆகிய நாட கங்கள், இசைப் பாடல்கள் மற்றும் தப் பாட்டம் மூலம் மாநாட்டு விளக்க பிரச் சாரம் நடைபெற்றது. இந்நிகழ்வில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட் டத் தலைவர் பி.பி.பழனிசாமி, செயலா ளர் ஏ.கே.பழனிசாமி, பொருளாளர் மா. அண்ணாதுரை, சிபிஎம் தாலுகா செய லாளர் ஆர்.முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து புளி யம்பட்டி பேருந்து நிலையம் அருகி லும் பிரச்சாரம் நடைபெற்றது.