இறந்த கால்நடைகளை கணக்கிட்டு முழுமையான இழப்பீடு வழங்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
திருப்பூர், ஜூலை 24 - வெறிநாய் கடித்து உயிரிழந்த ஏராளமான கால்நடைகளுக்கு தமிழக அரசு அறிவித்த இழப்பீடு கிடைக்காமல் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இறந்த கால்நடைகளை கணக்கிட்டு முழுமையான இழப்பீடு வழங்கு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டக்குழு கூட்டம் வியாழ னன்று காங்கேயத்தில் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமையில் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலா ளர் ஆர்.குமார் உள்பட மாவட்டக்குழு உறுப் பினர்கள் கலந்து கொண்டனர். சீமை கருவேல முட்களை அகற்றுக! இதில், நொய்யல் ஆற்றில் காங்கேயம் தாலுகா, கத்தாங்கண்ணி முதல் முத்தூர் வரை சீமைக் கருவேலி முட்கள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் மழைக் காலத்தில் நீர்வரத்தை இது பாதிக்கின்றது. எனவே சுற்றுச்சூழலை பாதிக்கும் சீமைக்க ருவேல முட்களை முழுவதுமாக அகற்றுவ தற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் பல மாதங் களாக தெருநாய் கடித்து கால்நடைகள் உயிரி ழப்பு தொடர்ந்து வருகிறது. இதனால் உயிரி ழந்த கால்நடைகளில் ஒரு பகுதியினருக்கு தமிழ்நாடு அரசு அறிவித்த இழப்பீடு வழங்கப் பட்டுள்ளது. ஆயினும் ஏராளமான உயிரி ழந்த கால்நடைகளுக்குரிய இழப்பீடு விவசா யிகளுக்குக் கிடைக்காமல் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் முதல் இறந்த கால்நடை களை கணக்கிட்டு முழுமையான இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனத்தை அனுமதிக்காதே! தாராபுரம் வட்டம், கிளாங்குண்டல் கிரா மம், வளையக்காரன் வலசு, கச எண். 812,824 /3, 825/2 என்ற புலத்தில் ஏவிஎம் கிரீன் வென்ச ரஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பன்னாட்டு நிறுவனம் தேங்காய் கறி தொட்டி ஆலை அமைக்க முயன்று வருகிறது. இந்த ஆலை அமைந்தால் சுற்றுச்சூழலும், விவசாயமும், கால்நடை வளர்ப்பும் பாதிக்கப்படும் என்று அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு குரல் கொடுத்து, மனு கொடுத்துப் போராடி வருகின்றனர். இந்நிலையில் மூலனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கட்டட அனுமதி வழங்கி உள்ளார். எனவே, பொதுமக்கள், விவசாயிகள் எதிர்ப்பை கணக்கில் கொள்ளாமல், வட்டார வளர்ச்சி அலுவலர் வழங்கிய கட்டட அனும தியை, மாவட்ட ஆட்சியர் ரத்து செய்ய வேண் டும். விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் இந்த கறித்தொட்டி ஆலை அமை வதை நிரந்தரமாக தடை செய்ய வேண் டும். குப்பை கொட்டுவதை நிறுத்துக! பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தில் 4 ஆவது மண்டலத்திற்கு தண்ணீர் விடும் சூழ்நிலையில், அனைத்து பிரிவு கால்வாய்க ளையும் கடைமடை வரை தூர் வாருவதற்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும். மாநகராட்சி யில் சேகரித்து வரும் குப்பைகளை காங்கே யம் வட்டம், கீரனூர் கிராமத்துக்குட்பட்ட பாறைக் குழிகளில் கடந்த சில நாட்களாக கொட்டப்படுகிறது. சுற்றுச்சூழல் குறித்து எந்த ஒரு ஆய்வும் இல்லாத சூழ்நிலையில், இவ்வாறு பாறைக் குழியில் குப்பையை கொட்டி நிரப்புவது இந்த பகுதியில் இருக் கிற விவசாயக் கிணறுகளும், நிலங்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே கீரனூர் பகுதியில் திருப்பூர் மாநகராட்சி குப்பை களை கொட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் மாவட்டப் பொருளா ளர் ஏ.பாலதண்டபாணி, மாவட்ட நிர்வாகி கள் வை.பழனிசாமி, எஸ்.கே.கொளந்த சாமி, எம்.எம்.வீரப்பன், எஸ்.பரமசிவம், காங் கேயம் தாலுகா நிர்வாகிகள் பி.லுச்சாமி, என். கே.குப்புசாமி, செல்வராஜ், குமாரசாமி உள் ளிட்ட மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.