tamilnadu

img

காயமுற்ற யானைக்கு தமிழக - கேரள வனத்துறையினர் சிகிச்சை!

காயமுற்ற யானைக்கு தமிழக - கேரள வனத்துறையினர் சிகிச்சை!

கோவை, அக்.4- பவானி ஆற்றின் மையப்பகுதி யில் காயமுற்ற நிலையில் காணப் பட்ட மக்னா யானைக்கு தமிழக - கேரள வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதி யான ஆனைகட்டி, தமிழக-கேரளா எல்லையில் அமைந்துள்ளது. இதன்  காரணமாக கேரள வனப்பகுதியி லிருந்து தமிழக வனங்களுக்குள் யானைகள் இடம்பெயர்தல் நிகழ்ந்து  வருகிறது. பவானி ஆற்றுப்பகுதி வழி யாகவும், வனப்பகுதி வழியாகவும் யானைகள் தமிழக எல்லைக்குள் நுழைவது வழக்கம். இந்நிலையில், கடந்த ஒரு வார மாக உடலில் காயங்களுடன் கேரளா  வனப்பகுதியிலிருந்து வெளியேறி, தமிழக வனப்பகுதியான கூடப்பட்டி மலைவாழ் கிராமத்திற்கு அருகே வந்துள்ள மக்னா யானை ஒன்று கண்டறியப்பட்டது. இதைப் பார்த்த  பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினர், அந்த யானைக்கு பழங் கள் மூலம் மருந்துகள் வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். ஆனால், அந்த யானை தமிழக-கேரளா வனப்பகுதிகளுக்கு மாறி  மாறி சென்று வருவதால் சிகிச்சை யில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை  இரவு முதல் அந்த மக்னா யானை பவானி ஆற்றின் மையப்பகுதியில் நின்று கொண்டிருக்கிறது. இதைப்  பார்த்த அப்பகுதி மக்கள், தமிழக மற் றும் கேரளா வனத்துறைகளுக்கு தக வல் அளித்தனர். இதன் அடிப்படை யில், சம்பவ இடத்திற்கு வந்த இரு  மாநில வனத்துறையினரும் அந்த  யானையை கண்காணித்து வரு கின்றனர். இது குறித்து கோவை மாவட்ட  வன அலுவலர் ஜெயராஜ் கூறுகை யில், “கடந்த ஒரு வாரமாக இந்த யானை அந்தப் பகுதியில் சுற்றி வரு கிறது. இரு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்த  யானை காயமுற்றது தெரியவந்துள் ளது. இந்த யானைக்கு வாழை, பலா  போன்ற பழங்களில் மருந்துகள் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. சில நாட்கள் கேரளா வனப் பகுதிக்குள் சென்றுவிட்டது. தற் போது இரு மாநில எல்லையில் கடந்த  இரண்டு நாட்களாக நின்று கொண்டி ருக்கிறது. . இந்த யானை நல்ல ஆரோக்கியத் துடன் காணப்படுவதால் மருத்துவர் கள் அளிக்கக்கூடிய மருந்துகளை சாப்பிட்டு வருகிறது. வனக் கால் நடை மருத்துவர் வெண்ணிலா தலைமையில் மருத்துவக் குழுவினர் யானையை கண்காணித்து வரு கின்றனர். பெரியநாயக்கன்பாளை யம் வனச் சரகத்தை சேர்ந்த பத்துக் கும் மேற்பட்ட வனப் பணியாளர்க ளும் யானையை கண்காணித்து வரு கின்றனர். ஆற்றின் மையப்பகுதி யில் யானை இருப்பதால் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் நிலவுகிறது. எனி னும், தண்ணீரிலிருந்து வெளியேறி வனப்பகுதிக்குள் வந்தால், அதற்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற் பாடுகளும் தயார் நிலையில் உள் ளன” என்றார்.