நீச்சல் போட்டி: வீரர்கள் அசத்தல்
பொள்ளாச்சி, ஆக.9– பொள்ளாச்சியில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பொள்ளாச்சி - கோவை சாலையில் உள்ள திசா பள்ளி யில் சனியன்று மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் நடை பெற்றது. இதில், கோவை, திருப்பூர், நீலகிரி, மதுரை, திருநெல்வேலி மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர். இதில், பட்டர்பிளை, ஃப்ரீ ஸ்டைல், மேக்ஸ் ட்ரக், ரிலே என பல்வேறு பிரிவிகளில் 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர் அளவிலான போட்டிகள் 14, 17, மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகளுக்கு தனித்தனியே நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.
இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யும் வரை போராட்டம்
உதகை, ஆக.9– நீலகிரி மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த பொருளாதா ரத்தை சீர்குலைக்கும் இ பாஸ் நடைமுறையை முழுவதும் ரத்து செய்யும் வரை நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் சனி யன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் முகமது பாரூக் தலைமை வகித்தார். இதில், கூடலூர் பகுதியில் மிகவும் மோசமாக உள்ள சாலை களை உடனே சீர் செய்து தராவிட்டால் கூடலூர் மக்களோடு சேர்ந்து நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும். பந்தலூர் தாலு காவில் உள்ள எல்லா பகுதிகளிலும் யானைகளினால் ஏற்ப டும் உயிரிழப்புக்கள் பாதிப்புகள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை அரசு எடுக்க வேண்டும். மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த பொருளாதா ரத்தை சீர்குலைக்கும் இ-பாஸ் நடைமுறையை முழு வதும் ரத்து செய்யும் வரை நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்க ளின் பேரமைப்பு போராடும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
வேளாண் கண்காட்சி
பொள்ளாச்சி, ஆக.9– தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண்மை இயந்திரங் கள் மற்றும் கருவிகள் பரா மரிப்பு குறித்த மாவட்ட அள விலான சிறப்பு விழிப்பு ணர்வு முகாம் மற்றும் கண் காட்சி பொள்ளாச்சியில் சனி யன்று நடைபெற்றது. வேளாண் சார்ந்த பணிக ளில், குறைந்த செலவில் அதிக மகசூல் பெறும் வகை யில் வேளாண் கருவிகள், மதிப்பு கூட்டு இயந்திரங்கள், ட்ரோன் தொழில்நுட்பம், உயர்தரமான சோலார் பம்ப் செட்கள் ஆகியவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. மேற்கண்ட இயந்திரங் கள் கண்காட்சியில் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது. பொள்ளாச்சி மீன்கரை சாலை தமிழ்மணி நகரில் நடைபெற்ற இம்முகாமை நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி திறந்து வைத்து பார்வையிட்டார். நிகழ்வில் கோவை மண்டல கண்காணிப்பு பொறியாளர் ஏஜி.பேபிமீனாட்சி, உப கோட்ட உதவி செயற்பொறி யாளர் எம்.சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
அனுமதியின்றி தட்டிகள் வைத்தால் நடவடிக்கை
நாமக்கல், ஆக.9- நாமக்கல் மாவட்டம், பொத்தனூர் பேரூராட்சிக்குட் பட்ட நான்கு சாலைப்பகுதி யில் பேரூராட்சி நிர்வாகத்தி டம் உரிய அனுமதி பெறா மல், பெரிய அளவில் விளம்ப ரத்தட்டிகள் வைக்கப்பட்டி ருந்தன. ஆபத்தான வகை யில் வைக்கப்பட்டிருந்த தட் டிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, விளம்பரத் தட்டிகளை பேரூராட்சி ஊழி யர்கள் அகற்றினர். மேலும், அனுமதி பெறாமல் விளம்ப ரத் தட்டிகள் வைத்தால் நடவ டிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவ லர் வேல்முருகன் எச்ச ரிக்கை விடுத்துள்ளார்.
6,839 மதுபாட்டில்கள் அழிப்பு
சேலம், ஆக.9- சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்து, பறி முதல் செய்யப்பட்ட 6,839 மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன. சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள இரும்பாலை மது விலக்கு பிரிவு, ஆத்தூர் மற்றும் மேட்டூரில் உள்ள மதுவிலக்கு பிரிவு போலீசார், தொடர்ந்து மதுவிலக்கு நடவடிக்கையில் ஈடு பட்டு வருகின்றனர். சட்ட விரோத மது விற்பனையை தடுத்து பல்வேறு இடங்களிலும் 1,323 லிட்டர் அடங்கிய, 6,839 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அந்த பாட்டில்கள், மது விலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் மகாவிஷ்ணு, டாஸ்மாக் மேலாளர் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில், ஓமலூர் அருகே வேலாகவுண்டனூர் ஏரி யில் கொட்டி வெள்ளியன்று அழிக்கப்பட்டது.
ரயில்வே மேம்பாலத்தில் கவிழ்ந்த லாரி
சேலம், ஆக.9- ஓமலூர் ரயில்வே மேம்பாலத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பாலம் குறுகலாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில் கோட்டை மாரியம் மன் கோயில் பகுதியில் ரயில்வே மேம்பாலம் ஒன்று அமைந் துள்ளது. இந்த மேம்பாலம் மிக வளைவாகவும், குறுகலாக வும் அமைந்துள்ளதால், அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற் படுவதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்நி லையில், பெங்களூருவிலிருந்து கோவைக்கு பிஸ்கெட் களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஓமலூர் வழியாக வந்து கொண்டிருந்தது. அப்போது, ஓமலூர் மேம்பாலம் பகுதி யில் வளைவு பகுதிக்கு வந்தபோது, லாரி சாலையிலே தலை குப்புற கவிழ்ந்தது. லேசாக காயமடைந்த ஓட்டுநரை அவ்வழி யாக சென்றவர்கள் மீட்டு, ஓமலூர் அரசு மருத்துவம னைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இவ்விபத்து கார ணமாக சேலத்திலிருந்து மேட்டூர் மற்றும் தாரமங்கலம் செல் லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மேட்டூரில் இருந்து செல்லக்கூடிய வாகனங்களும், சேலத் தில் இருந்து மேட்டூர் நோக்கி வரக்கூடிய வாகனங்களும் சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு அணிவகுத்து நின்றன.