நன்செய் பண்ணையில் மாணவர்கள் நெல் நடவு
கோவை, அக்.8- வேளாண் பல்கலை மாணவர்கள் நன்செய் பண்ணையில் நெல் நடவுப் பணியை மேற்கொண்டனர். கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண்மை (மேதமை) மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள், நன்செய் பண்ணையில் நெல் நடவுப் பணியை செவ்வாயன்று காலை மேற்கொண்டனர். மாணவர்கள் தாங்கள் கற்ற அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, சேற்றுழவு முதல் அறுவடை வரையிலான அனைத்து பணிகளையும் தாங்களே செய்ய வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு மாணவருக்கும் 4 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. விழாவின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முதன்மையர் (வேளாண்மை) முனைவர் என். வெங்கடேசபழனிசாமி, நெல் நடவுப் பணியை தொடங்கி வைத்தார். பல்கலைக்கழக உயர் அதிகாரிகள், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வயலில் இறங்கி, மாணவர்களுடன் நெல் நாற்று நடவை மேற்கொண்டனர்.
