tamilnadu

img

வாலிபர் சங்க சேலம் மாநாடு – பேரணி

வாலிபர் சங்க சேலம் மாநாடு – பேரணி

சேலம், செப். 8- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் சேலம் மாவட்ட 18 வது மாநாடு பேரணி ஆத்தூரில் ஞாயிறன்று துவங்கி யது.  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் சேலம் மாவட்ட மாநாடு ஆத்தூரில்,  செப்.7,8 தேதிகளில் நடைபெற்றது. முன்னதாக, ஆத்தூரில் ஆத்தூர் அரசு  ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதல்  பழைய பேருந்து நிலையம் வரையில்  ஏராளமான இளைஞர்கள் பங்கேற்ற  பேரணி நடைபெற்றது. பேரணியை வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச்  செயலாளர் ஆர் குழந்தைவேல் துவக்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, ஆத்தூர் பகத்சிங் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு, மாவட்ட துணைத் தலைவர் பி.திவ்யா தலைமை  ஏற்றார். ஆத்தூர் தாலுகா தலைவர் எஸ்.பிரபு வரவேற்றார். இதில், வாலிபர் சங்க மாநிலத் தலை வர் எஸ்.கார்த்தி, மாநிலப் பொருளாளர்  கே.எஸ்.பாரதி, மாநில துணைத்தலை வர் எம்.கே.பழனி, மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.அர்ஜுன், மாவட்டச் செயலாளர் வி.பெரியசாமி, பொருளா ளர் எம்.வெற்றிவேல் ஆகியோர் உரை யாற்றினர். முன்னதாக பொதுக்கூட்டத் தில், பாண்டிச்சேரி சப்தர் ஹஷ்மி கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.