போலி நிறுவனம் மூலம் ரூ.30 கோடி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் புகார்
சேலம், ஜூலை 30- போலி நிறுவனம் மூலம் ரூ.30 கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப் பட்டவர்கள் சேலம் மாநகரக் காவல் ஆணையர் அலுவல கத்தில் புகாரளித்தனர். சேலம் மாவட்டத்தில் சமீப காலமாக ‘வாட்ஸ்அப்’ குறுஞ் செய்தியில் ‘மார்க்கெட் மாஸ்டர்’ என்ற நிறுவனத்தின் பெயரில் வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் வந்துள்ளது. கபீர் கண்ணா என்பவர் அனுப்பும் லிங்கிலுள்ள மென்பொருளை பதிவிறக்கம் செய்து, அதில் முதலீடு செய்தால் இரு மடங்கு லாபம் கிடைக்கும் என நம்ப வைத்துள்ளனர். அதிக லாபம் கிடைக்கும் என்ற நோக்கில் ஆயிரக்கணக்கான வாடிக்கையா ளர்கள் பல ஆயிரக்கணக்கான பணத்தை (மொத்தம் ரூ.30 கோடி) முதலீடு செய்துள்ளனர். தற்போது பணத்தை பெற்றுக் கொண்டு கபீர் கண்ணா மற்றும் மார்க்கோ ஆகிய இரு வரும் தப்பியோடிவிட்டனர். எனவே, இருவரையும் காவல் துறையினர் கைது செய்து, பணத்தை திரும்ப பெற்றுத்தரக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் புதனன்று சேலம் மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.