ரூ.14.75 கோடி மதிப்பீட்டில் காங்கேயத்தில் சாலை மேம்பாட்டுப் பணி
திருப்பூர், அக்.3- காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.14.75 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணி மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணியை அமைச்சர் வெள்ளியன்று துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், நத் தக்காடையூர் பரஞ்சேர்வழி, வீரணம்பாளையம் ஊராட்சி பகு திகள் மற்றும் குண்டடம் ஊராட்சி ஒன்றியம், வடசின்னாரி பாளையம், செங்கோடம்பாளையம் எல்லப்பாளையம் ஊராட்சி பகுதிகளில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம் பாட்டுத்திட்டம் மற்றும் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் ரூ.14.75 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணி மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெள்ளியன்று துவக்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.சங்கமித்திரை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பி னர் கே.இ.பிரகாஷ், காங்கேயம் நகர்மன்றத் தலைவர் சூரிய பிரகாஷ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.
