சாலையில் குவியும் குப்பையால் நோய் பரவும் அபாயம்
கிருஷ்ணகிரி, செப்.3- ஓசூர் மாநகராட்சி, மத்தி கிரி கூட்ரோடு பகுதிக்கு அரு கில் செவன்த்டே பள்ளிக ளின் தலைமை அலுவலகம் ஒட்டி நவதி கிராமத்திற்கு செல்லும் சாலையில் பல மாதங்களாக குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பிரதான சாலையிலிருந்து நவதி கிராமம் வரை செல்லும் சாலையில் செவன்த்டே அலுவலகம் வரை ஓசூர் மாநகராட்சியுடன் உள்ளது. நவதி 7 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஒன்னல் வாடி ஊராட்சியுடன் உள்ளது. அடுத்து நடை பெற இருக்கும் மாநக ராட்சி தேர்தலுக்குள் நவதி உட்பட ஒன்னல்வாடி ஊராட்சி வரை ஓசூர் மாநக ராட்சியுடன் இணைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. ஏற்கெனவே, 10 ஆண்டு களுக்கு முன்பிருந்தே நவதி உட்பட இப்பகுதி சில தனி யார்கள் குடியிருப்புகள் பெருக்கத்தால் ஓசூர் மாநகர் பகுதி போல அனைத்து வசதிகளிலும் முன்னேறியுள்ளது. இப்பகுதியில் வசிப்ப வர்கள் நவதி சாலையில் செவன்த்டே அலுவலகம் அருகில் இரவு நேரங்களில் வழக்கமாக குப்பைகளை கொட்டி செல்வதாக கூறப்படுகிறது. எப்போதாவது இப்பகுதி யில் தேர்த்திருவிழா நடந்தால், அல்லது ஆளும் கட்சியினர், அமைச்சர்கள், உயர் அரசு அதிகாரிகள் நிகழ்ச்சிகள் நடந்தால் மட்டுமே குப்பைகள் அள்ளப்படுகிறது. தற்போது பல மாதங்களாக குப்பைகள் தேங்கியுள்ளது. இதனால் பூச்சிகள், ஈக்கள் கொசுக்கள் அதிகமாக மொய்த்து கடும் துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இது குறித்து மாநகராட்சி தூய்மை பணிகள் அலுவ லகத்தில் புகார் அளித்தால் இப்பகுதி ஊராட்சிக்கு சொந்தமானது என்றும், ஊராட்சி நிர்வாகத்திடம் கூறினால் அப்பகுதி மாநக ராட்சிக்கு சொந்தமானது என்றும் தொடர்ந்து சாக்குப் போக்கு கூறப் பட்டுவருகிறது என்று இப்பகுதியினர் வேதனை யுடன் தெரிவிக்கின்றனர். தற்போது ஊராட்சி நிர்வாகமும் இல்லாத நிலையில் 3 மாதங்களுக்கும் மேலாக குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. குப்பைகளை அகற்ற ஓசூர் சாராட்சியர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிபிஎம் மாநகர குழு சார்பில் செயலாளர் நாகேஷ்பாபு, இப்பகுதி விவசாயிகள் சங்க நிர்வாகி அந்தோணி சாமி கோரிக்கை விடுத்து ள்ளதுடன், விரைவில் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் சிபிஎம் சார்பில் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த இருப்பதாகவும் அறி வித்துள்ளனர்.