மார்க்கெட்டில் வாடகை உயர்வு: பூ வியாபாரிகள் சாலை மறியல்
சேலம், ஜுலை 17 - சேலம் பழைய பேருந்து நிலை யம் அருகே உள்ள வ.உ.சி. பூ மார்க் கெட்டில் புதிய டெண்டர் மூலம் கடை களின் வாடகை பல மடங்கு உயர்த் தப்பட்டதைக் கண்டித்து, நூற்றுக் கும் மேற்பட்ட பூ வியாபாரிகள் வியா ழனன்று சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற் பட்டது. சேலம் சின்ன கடைவீதியில் அமைந்துள்ள வ.உ.சி. பூ மார்க்கெட் கடந்த 75 ஆண்டுகளாக மாநகராட்சி சார்பில் செயல்பட்டு வந்தது. ஒன் றிய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத் தின் கீழ் இந்த மார்க்கெட் இடிக்கப் பட்டு, புதிதாகக் கட்டப்பட்டு கடந்த ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு வந் தது. முன்பு ஒரு நாளைக்கு ரூ.100 என்ற குறைந்த வாடகையில் நூற் றுக்கும் மேற்பட்ட பூ வியாபாரிகள் தொழில் செய்து வந்தனர். இந்நிலையில், மாநகராட்சி நிர் வாகம் தற்போது புதிய டெண்டரை வெளியிட்டுள்ளது. இதில் சிறிய கடைக்கு ரூ.8 லட்சம் முதல் பெரிய கடைக்கு ரூ.15 லட்சம் வரை வைப்புத் தொகையாகவும், மாத வாடகையாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பூ வியாபாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அன் றாட வருமானம் ஈட்டும் சிறு வியாபாரி களால் இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியாது என் றும் வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பல மடங்கு வாடகை உயர்வால், தங்கள் தொழில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர் பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டபோது, ஒப்பந்தத்தை மாற்ற முடியாது என நிராகரித்து விட்டனர். பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இத னால் வேறு வழியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்ற னர். இதனையடுத்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன் பாடு எட்டப்படாததால், பூ வியாபாரி கள் மாநகராட்சி ஆணையரை சந்தித் தனர். அந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததால், மாநகராட்சி அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற் பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர். தங்கள் கடைகளுக்கு விடப்பட் டுள்ள ஏலத்தை ரத்து செய்ய வேண் டும் என்றும், பழைய நடைமுறையி லேயே நாள் ஒன்றுக்கு ரூ.100 அல்லது ரூ.200 என்ற அளவில் வாடகை வசூ லிக்க வேண்டும் என்றும் வியாபாரி கள் வலியுறுத்தினர். கோரிக்கை நிறைவேறாவிட்டால் வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றை ஒப்படைக்கப் போவதாகவும் எச்சரித்தனர்.