கழிவறையின்றி அல்லல்படும் ரங்கநாதபுரம் நடுநிலைப் பள்ளி குழந்தைகள்
திருப்பூர், ஆக.27- திருப்பூர் மாநகராட்சி ரங்கநாதபுரம் பகுதி யில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பல மாதங்களாக கழிவறை பணிகள் நடை பெற்று வருவதால், 500க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சி 25 ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் இந்த நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில், 500க்கும் மேற்பட்ட குழந்தை கள் படித்து வருகின்றனர். சிறுபூலுவப்பட்டி, ரங்கநாதபுரம், ஜெயலலிதா நகர், அமர் ஜோதி சாமுண்டி நகர், அணைப்பாளையம், ஜீவா நகர், எப்.டி.நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் இந்த பள்ளியில் படிக்கின்றனர். இந்நிலையில் இந்த பள்ளி யில் இருந்த கழிவறைகள் பழுதாகி பயன்ப டுத்த முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து, புதிய கழிப்பறைகள் கட்டும் பணி ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. ஆறு மாதங்கள் கடந்தும் இன்னும் பணிகள் முடிக்கப்படாத தால் பள்ளி மாணவ, மாணவிகள் கடும் இன்ன லுக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து இப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் சிலர் கூறுகையில், பள்ளியில் இருந்த கழிப்பறைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. தண்ணீர் வெளியே செல்லாமல் குழந்தைகளுக்கு பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்பட்டது. இதை யடுத்து பள்ளி நிர்வாகத்திடம் இதுகுறித்து புகார் அளித்ததை அடுத்து, புதிய கழிவறை கள் கட்டும் பணி ஏப்ரல் மாதம் தொடங்கப் பட்டது. தற்போது செப்டம்பர் மாதம் வரப் போகிறது. இன்னும் பணிகள் முடிக்கப்ப டாமல் உள்ளது. இதனால் குழந்தைகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். காலை முதல் மாலை வரை எப்படி கழிவறைக்கு செல்லா மல் இருக்க முடியும். 500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் பள்ளியில் கழிவறை இல்லாமல் இருப்பது ஏற்புடையது அல்ல. தற் போதைக்கு பெண் குழந்தைகள் மட்டும் ஆசி ரியர்கள் பயன்படுத்தும் கழிவறைகளை பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர். இருப்பினும் இரண்டு கழிப்பறைகள் போது மா? ஆண் குழந்தைகள் வெளியே சென்றா லும், டாய்லெட் வந்தால் என்ன செய்வது. மாலை வீட்டிற்கு வந்து தான் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்ற சூழல் உள்ளது. எனவே உடனடியாக அடிப்படை தேவையை கருத்தில் கொண்டு கழிவறை பணிகளை முழுமையாக முடித்து பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தெரி வித்தனர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், இந்த பள்ளியில் 520 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் இருந்த பழைய கழிவறைகள் முழுவதும் சேதம் அடைந்துவிட்டது. இதையடுத்து புதிய கழிவறைகள் கட்ட முடிவெடுக்கப்பட்டது. மாமன்ற உறுப்பினர் மூலம் ஏற்பாடு செய் யப்பட்டு ஏப்ரல் மாதம் பணிகள் தொடங்கப் பட்டது. தற்போதைக்கு பள்ளி வளாகத்தில் உள்ள காலி இடத்தில் ஆண் குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் சீட் போட்டு மூடப் பட்டு தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண் குழந்தைகள் ஆசிரியர்கள் கழிவறை களை பயன்படுத்தி வருகின்றனர். அருகா மையில் உள்ள வீடுகளில் மாணவர் களை கழிவறைகள் பயன்படுத்த அனுமதிக் கப்பட்டனர். சில பிரச்சனைகளால் தற்போது அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது. கழிவறை பிரச்சனைகளால் பல குழந்தைகள் பள்ளி யில் இருந்து டிசி வாங்கி கொண்டு சென்றுவிட் டனர். ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் கழிவறை பணிகளை முடித்து தரும் படி கூறியிருந் தோம். முடித்து தருவதாக தெரிவித்தனர். இருப்பினும் முடிக்கப்படவில்லை. இன்னும் டைல்ஸ் ஒட்டுவது, தண்ணீர் செல்ல குழாய் கள் அமைப்பது உள்ளிட்ட பல பணிகள் செய்ய வேண்டியுள்ளது. கட்டிடப் பணிகள் மட்டும் முடிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் யார் என்று தெரியவில்லை. மாமன்ற உறுப்பி னர் மூலம் பணிகளை விரைந்து முடிக்க கூறி வருகிறோம் என தெரிவித்தார். இதுகுறித்து 25 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் தங்கராஜ் கூறுகையில், நடுநிலை பள்ளியில் கழிவறை கட்டுவதற்கு ரூ.27 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மணிகண் டன் என்பவர் ஒப்பந்தம் எடுத்துள்ளார். பணி களை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் மெத்தனப்போக்கில் செயல்படுகிறார். பணி கள் பற்றி கேட்கும் போதெல்லாம் முடித்து தரு வதாக கூறுகிறார். ஆனால் பணிகளை முடித்தது போல் தெரியவில்லை என்றார். இதுகுறித்து அப்பகுதி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் கூறுகையில், பள்ளியில் கழிவறை இல்லாமல் இருப்பது ஏந்த வகை யிலும் ஏற்புடையதல்ல. அரசு அலுவல கங்களில், கடிதங்களில் ஏதேனும் பணிகள் நடைபெற்றால், எந்த நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது. ஒப்பந்த தொகை எவ்வளவு? எப்போது பணிகள் முடிக்கப்படும் என அறிவிப்பு பலகை வைத்திருக்க வேண்டும். ஆனால் இங்கு அப்படி எதுவும் வைக்கப்ப டவில்லை. முழு ஆண்டு விடுமுறை விடுவ தற்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டது. இரு மாதம் விடுமுறைக்குள் பணிகளை முடித்தி ருக்க வேண்டும். ஆனால் முடிக்கப்பட வில்லை. விரைந்து பணிகளை முடிக்காவிட் டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்த னர்.