மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணச் சலுகை வழங்கிடுக
நாமக்கல், ஆக.24- மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணச் சலுகை வழங்க வேண்டும் என அனைத் துத்துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத் தியுள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க நாமக்கல் மாவட்ட 5 ஆவது மாநாடு, சனியன்று, சங்கத் தின் மாவட்டத் தலைவர் கே.எஸ்.இளங் கோவன் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் கொடியை மூத்த தோழர் ஜெகதீசன் ஏற்றி வைத்தார். மாவட்ட துணைத்தலைவர் எஸ்.கோபால கிருஷ்ணன் வரவேற்றார். துணைத் தலைவர் தா.சையத் முஸ்தபா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதி யர் சங்க மாவட்டத் தலைவர் பி.கே.ராம சாமி துவக்கவுரையாற்றினார். சங்கத் தின் மாவட்டச் செயலாளர் ஆ.குப்பு சாமி, பொருளாளர் பி.கே.பெரியசாமி ஆகியோர் அறிக்கைகளை முன்வைத் தனர். ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசி ரியர் நலச்சங்க மாவட்டத் தலைவர் பி. கே.கருப்பன், மின்வாரிய ஓய்வுபெற் றோர் நல அமைப்பின் மாவட்டத் தலை வர் சின்னுசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், தமிழக அரசு தேர்தல் கால வாக்குறுதிகளை நிறை வேற்ற வேண்டும். புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தின் குறைபாடுகளை சரி செய்ய வேண்டும். ஒன்றிய அர சின் 8 ஆவது ஊதியக்குழுவின் பயன் களை ஊழியர்களுக்கும், ஓய்வூதியர் களுக்கும் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்ப டுத்த வேண்டும். ரயில் பயணத்திற்கு மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் மாவட்டத் தலைவராக கே.எஸ்.இளங் கோவன், செயலாளராக ஆ.குப்புசாமி, பொருளாளராக பி.கே.பெரியாமி, 3 துணைத்தலைவர்கள், 3 இணைச்செய லாளர்கள், மாநில செயற்குழு உறுப் பினராக அ.செல்வம், தணிக்கையாளர் களாக நடராஜன், தேக்கமலை ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநி லச் செயலாளர் குரு.சந்திரசேகரன் நிறைவுரையாற்றினார். அ.செல்வம் நன்றி கூறினார்.