tamilnadu

img

ஒகேனக்கல் குடிநீர் கேட்டு ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

ஒகேனக்கல் குடிநீர் கேட்டு ஊராட்சிமன்ற  அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

தருமபுரி, செப். 15 – ஒகேனக்கல் குடிநீர் விநியோகத் தில் ஏற்பட்ட தாமதத்தைக் கண்டித்து  தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட் டம், மாங்கரை ஊராட்சி மக்கள் ஊராட்சி  மன்ற அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தினர். கடந்த 20  நாட்களுக்கும் மேலாக குடிநீர் கிடைக் காததால் ஆவேசமடைந்த மக்கள், காலி  குடங்களுடன் வந்து தங்கள் எதிர்ப் பைப் பதிவு செய்தனர். ஒகேனக்கல் குடிநீர் திட்டம் என் பது தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக் கான கிராமங்களுக்கு குடிநீர் வழங்கு வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பெரிய  திட்டமாகும். இத்திட்டம், ஒகேனக்கல் லில் இருந்து நீர் சுத்திகரிக்கப்பட்டு,  குழாய்கள் மூலம் பல்வேறு பகுதிக ளுக்கு விநியோகிக்கப்படுகிறது. சுமார்  ரூ.1,928 கோடி மதிப்பீட்டில் உருவாக் கப்பட்ட இத்திட்டம், அப்பகுதியின் குடி நீர் தேவையை நிறைவு செய்வதில் முக் கியப் பங்கு வகிக்கிறது. இந்நிலையில், மாங்கரை ஊராட்சி யில் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 20 நாட்க ளாக ஒகேனக்கல் குடிநீர் விநியோ கம் செய்யப்படவில்லை என கூறப்படு கிறது. இதனால், பொதுமக்கள் கடும்  சிரமத்திற்குள்ளாகினர். அருகிலுள்ள விவசாயக் கிணறுகளில் இருந்து தண் ணீரை எடுத்து வந்தும், சிலர் விலைக்கு  வாங்கியும் தங்களது அன்றாட தேவை களைப் பூர்த்தி செய்து வந்தனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகம்  மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் எந்த நட வடிக்கையும் எடுக்கப்படாததால், மக்கள் விரக்தியடைந்தனர். இந்நிலையில், கோபமடைந்த மக்கள் காலிக் குடங்களுடன் மாங்கரை ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்று கையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். போராட்டத்தைப் பற்றி அறிந்த பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவ லர் மற்றும் ஊராட்சி செயலாளர் மாதையன் ஆகியோர் சம்பவ இடத் திற்கு வந்து மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஒரு வாரத்திற் குள் ஒகேனக்கல் குடிநீர் விநியோ கத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்ப தாக அவர்கள் உறுதியளித்தனர். அதி காரிகளின் இந்த வாக்குறுதியை ஏற்று மக்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இந்தச் சம்பவத்தால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற் பட்டது.