பட்டா கேட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு மனுக்களுடன் தர்ணா
சேலம், ஆக.22- இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி 50 ஆண்டுகளுக்கு மேலாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததல், நூற்றுக் கும் மேற்பட்ட பொதுமக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா வில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், சங்க கிரி அருகே இடங்கணசாலை பகுதியில் அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில், கடந்த 50 ஆண்டுகளாக வீடு கட்டி நூற்றுக்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந் நிலையில், 1976 ஆம் ஆண்டு தனியாரிடமி ருந்து கையகப்படுத்தப்பட்ட நத்தம் புறம் போக்கு நிலத்தில், ஒரு பகுதியான நிலத்தை 30 குடும்பத்தினர் வசித்து கொள்ளும்படி ஆதி திராவிடர் நலத்துறை வழங்கியது. இந்நி லையில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், பட்டியலின கிராம நத்தம் நிலத்தில் மீதமுள்ள குடும்பத் தினர் குடிசை அமைக்க முயற்சி செய்த போது, குடிசைகளை அப்புறப்படுத்தி காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இத னால் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட முறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இத னால், வெள்ளியன்று கொடுக்கப்பட்ட மனுக் களை கழுத்தில் மாலையாக அணிவித்து கொண்டு, 100க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா வில் ஈடுபட்டனர். அப்போது, தடுக்க முயன்ற காவல் துறையினரிடம், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்துதான் மனு அளிப்போம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.