tamilnadu

img

நிலுவைத்தொகையை வழங்க வலியுறுத்தி போராட்டம்

நிலுவைத்தொகையை வழங்க வலியுறுத்தி போராட்டம்

நாமக்கல், செப்.16- கட்டுமானப் பணியை மேற் கொண்டு வந்த தொழிலாளிக்கு, நிலுவ ைத்தொகையை வழங்க வலியுறுத்தி சிஐடியு-வினர் காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யத்தை அடுத்த சமயசங்கிலி, செங் குட்டை பாளையம், சஷ்டி நகர் பகுதி யில் கோபால் என்பவருக்கு கடந் தாண்டு சம்பத்குமார் என்பவர் வீடு  கட்டிக் கொடுக்கும் பணியை ஏற்றுக் கொண்டு, 20க்கும் மேற்பட்ட தொழிலா ளர்களைக் கொண்டு பணிகளை செய்து  வந்தார். பணிகள் நிறைவு பெற்ற நிலை யில், சம்பத்குமாருக்கு சம்பளம் பணம்  ரூ.6 லட்சத்து 20 ஆயிரத்து 972யை  கொடுக்காமல் வீட்டின் உரிமையாளர்  கோபால் காலதாமதம் செய்து வந்தார்.  இதுகுறித்து பலமுறை நேரில் கேட்டும்,  காவல் நிலையத்தில் புகாரளித்தும்  எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனிடையே, தீர்வு கேட்டு,  சம்பத்குமார் இந்திய தொழிற்சங்க  மையத்தை (சிஐடியு) அணுகினார்.  இதனையடுத்து சம்பளம் வழங்கும் வரை பாதிக்கப்பட்ட தொழிலாளி குடும்பத்துடன், கோபால் வீட்டின் முன்பு காத்திருப்புப் போராட் டம் செவ்வாயன்று நடைபெற்றது. சிஐ டியு மாவட்டத் தலைவர் எம்.அசோ கன் தலைமை வகித்தார். ஈரோடு  மாவட்ட கட்டுமான சங்க பொதுச்செய லாளர் ஆர்.நட்ராஜ் சிறப்புரையாற்றி னார். காலை துவங்கி மாலை 4 மணி  வரை நடைபெற்ற போராட்டத்தின் போது, குமாரபாளையம் வட்டாட்சியர் பிரகாஷ், சமயசங்கிலி கிராம நிர்வாக அலுவலர் செந்தில், ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் முனிராஜ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை மேற் கொண்டனர். அப்போது, விரைவில் சம் பந்தப்பட்ட கோபாலுடன் பேசி நிலு வைத்தொகையை பெற்று தருவ தற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தனர். அதனடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப் பட்டது. முன்னதாக, இப்போராட்டத் தில் சிஐடியு நிர்வாகிகள் கே.குமார், எஸ்.முத்துக்குமார், அங்கமுத்து, ராஜேந்திரன், அண்ணாதுரை மல்லேஸ் வரன், துரைசாமி உட்பட பலர் கலந்து  கொண்டனர்.