tamilnadu

img

அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த சிஐடியு ஆர்ப்பாட்டத்தில் போலீசார் குறுக்கீடு

அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த சிஐடியு ஆர்ப்பாட்டத்தில் போலீசார் குறுக்கீடு

கோவை, ஜூலை 5– போலீசாரால் அடித்து கொலை  செய்யப்பட்ட அஜித்குமார் மர ணத்திற்கு நீதி கேட்டு கோவையில் சிஐடியு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, உள்ளே புகுந்த போலீசார் அஜித்குமார் பெயரை பயன்படுத் தக்கூடாது என குறுக்கீடு செய்த தால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித்குமார் என்கிற  இளைஞரை, போலீசார் கொடூர மாக தாக்கி கொலை செய்தனர். இச்சம்பவம் தமிழகத்தையே அதிர்ச் சிக்குள்ளாக்கியது. காவலாளியின் மரணத்திற்கு நீதி கேட்டு மார்க் சிஸ்ட் கட்சி, சிஐடியு உள்ளிட்ட இயக் கங்கள் போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன்ஒருபகுதியாக சிஐடியு கோவை மாவட்ட தனி யார் பாதுகாவலர் சங்கத்தின் சார் பில், அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், 8 மணிநேர வேலை உத்தர வாதம் வேண்டும், காவலர்களுக்கு கூடுதல் நேர பணிக்கு (ஓவர்டைம்) இரட்டிப்பு சம்பளம் வேண்டும். பணி யில் இருக்கும் போது சமூக விரோதி களால் தாக்கப்பட்டு மரணமடைந் தால் காவலர்கள் பணியாற்றும் நிறு வனம் ரூ.10 லட்சம் நிவாரணம்  வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போலீசாரின் அனுமதி பெற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் பொதுச் செயலாளர் என்.செல்வ ராஜ் தலைமை ஏற்றார். இதில், சிஐ டியு மாவட்டத் தலைவர் கே.மனோ கரன், செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் கே. ரத்தினகுமார், எஸ்.சந்திரன் உள் ளிட்டோர் பங்கேற்று உரையாற்றி னர். முன்னதாக ஆர்ப்பாட்டம்  நடைபெற்றுக் கொண்டிருக்கை யில், பந்தய சாலை காவல் ஆய்வா ளர் மற்றும் சில போலீசார் உள்ளே  நுழைந்து, அஜித்குமார் பெயரை பயன்படுத்தக்கூடாது என தொடர்ந்து இடையூறு செய்தனர். முறையாக அனுமதி பெற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குள் புகுந்து தடுப் பது சரியல்ல என சிஐடியு தலைவர் கள் தெரிவித்தனர். இருப்பினும், நீதிமன்றத்தில் வழக்கு இருக்கி றது நீங்கள் பேசக்கூடாது என தொடர்ந்து குறுக்கீடு செய்தனர். அப்படித்தான் பேசுவோம் வேண்டு மானால் வழக்கு போடுங்கள் என  சிஐடியு தரப்பில் உறுதியாக தெரி வித்து, தொடர்ந்து ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். வேறுவழியின்றி போலீசாரும் அங்கிருந்து அகன்ற னர்.