tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

முதலமைச்சர்-திருமாவளவன் சந்திப்பு

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை செவ்வாய்க் கிழமை (அக்.14) சென்னை தலைமைச் செயலகத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் சந்தித்தார்.  இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்தோம். இன்னும் சில சாதிப் பெயர்களில் உள்ள ‘ன்’ விகுதியை மாற்றி ‘ர்’ விகுதியாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தோம். நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரி யர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். வடசென்னை பகுதி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார்” என்று கூறினார். இந்த சந்திப்பின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் கே. சிந்தனைச்செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, ஜெ.முகமது ஷா  நவாஸ், எம்.பாபு ஆகியோர் உடனிருந்தனர்

ஆணவப் படுகொலைக்கு கண்டனம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக் கையில், “திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், கூட்டத்து அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (23), கணபதிபட்டி கிராமம் சந்திரன் மகள் ஆர்த்தி (21) இருவரும் திருமணம் செய்து கொண்ட னர். வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஆர்த்தி குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலை யில், ஆர்த்தியின் தந்தை சந்திரன் உட்பட 10 பேர் கொண்ட கும்பல், ராமச்சந்திரனை வழிமறித்து அரிவாளால் வெட்டி  படுகொலை செய்துள்ளது. இந்த சாதிவெறி ஆணவப் படு கொலைக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து தண்டிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க  வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

எம்எல்ஏக்களுக்கு ஜிஎஸ்டி சலுகை: முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதி

சென்னை: எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக  ஜிஎஸ்டி கட்டண சலுகையுடன் தலா 3 கோடி ரூபாய் வீதம், 702 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.  தொகுதி மேம்பாட்டு பணிகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி  கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதனால் எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதி நிதியில் 54 லட்சம் ரூபாயை ஜிஎஸ்டி யாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில் எம்எல்ஏக்கள் ஜிஎஸ்டி விலக்கு கோரிய போது, முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக அரசே இந்த தொகையை ஏற்கும் என்று அறிவித்தார். அதை நிறைவேற்றும் வகையில் தற்போது அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள் 3 கோடி ரூபாய்க்கு முழுமையாக தொகுதி மேம்பாட்டு பணிகளை மேற்கொண்ட பின், 54 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி கட்ட ணத்தை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி வெளி யிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்டமன்ற வளாகத்தில் அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் தர்ணா

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே செவ்வாய்க்கிழமை (அக்.14) கூடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க வந்த அன்புமணி ராமதாஸ் ஆதரவு  பாமக எம்எல்ஏக்கள் வெங்கடேஸ்வரன், சதாசிவம், சிவக் குமார் ஆகிய 3 பேர் திடீரென பேரவை வளாகத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பாமக சட்டமன்ற குழுத்  தலைவர் பதவியில் இருந்து ஜி.கே.மணியை நீக்க வலி யுறுத்தி முழக்கம் எழுப்பினர். மேலும் ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ-க்களான ஜி.கே.மணி, அருள் உள்ளிட்டோரின் பொறுப்புக்களை பறிக்க வேண்டும் எனக் கோரி அன்பு மணி ஆதரவு எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.