கல்லறைகளை அகற்றியோர் மீது நடவடிக்கை எடுத்து மயானத்தை மீட்கக் கோரி மனு
ஈரோடு, செப்.15- பெருந்துறை அருகே கல்லறை களை அகற்றி, சுடுகாட்டை ஆக்கிர மிக்க முயல்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளித்தனர். இதுகுறித்து அம்மனுவில் தெரி வித்துள்ளதாவது, ஈரோடு மாவட் டம், பெருந்துறை அருகே திருவேங்க டம்பாளையத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊர் உருவான காலம் முதல் அப்பகுதி யில் குறிப்பிட்ட இடத்தை மயானமாக பயன்படுத்தி வருகிறோம். வழக்கப்படி உரிய வழிமுறைகளுடன் புதைப்பதும், அகால மரணம் அடைந்தவர்களை எரிப்பதும் நடைமுறையாகும். இந்நிலையில் முன்னோர்களின் கல்லறைகள், இதன் அருகிலுள்ள மரங் களை வெட்டி அகற்றுதல் மற்றும் மண் அள்ளும் பணியில் ரியல் எஸ்டேட் நிறு வனத்தினர் பக்கத்து இட உரிமையாள ரின் உதவியுடன் ஈடுபட்டுள்ளனர். ஜேசிபி, புல்டோசர் மற்றும் டிப்பர் போன்ற வாகனங்களும், இயந்திரங் களும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு உரிய அனுமதி பெற்றதாகவும் தெரியவில்லை. இவ்வாறு மயா னத்தை தடமாக்கி ஆக்கிரமிப்பு செய் யும் வேலைகள் நடைபெறுகிறது. இவ் வாறு ஆக்கிரமிக்கும் நோக்கம் நிறை வேறினால் மயான உரிமையை இழக்க நேரிடும். எனவே, முன்னோர்களின் கல் லறைகளை அகற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண் டும் என அப்பகுதியினர் மனு அளித்த னர். திருவேங்கடம்பாளையம் சுடுகாடு மீட்புப் பணிக்குழுவினர் டி.எஸ்.செல்ல குமாரசாமி தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெருந்துறை தாலுகா செயலாளர் ஆர்.அர்ஜுனன் உள்ளிட்ட திரளானோர் இந்த மனு அளிக் கும் இயக்கத்தில் பங்கேற்றனர்.