tamilnadu

குடிநீர் விநியோகிக்க பட்டியலின மக்கள் மனு

குடிநீர் விநியோகிக்க பட்டியலின மக்கள் மனு

தருமபுரி, ஜூலை 8– தருமபுரி மாவட்டம், செட்டிக்கரை ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் காலனி மக்கள், தங்கள் பகுதிக்கு ஒகே னக்கல் குடிநீர் வழங்கக் கோரி திங்க ளன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்திரா நகரில் 100க்கும் மேற்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் நிலமற்ற விவசாயக் கூலி தொழிலாளர்கள். நீண்ட கால மாகவே அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வந்த இந்த மக்கள், சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கோரி அதிகா ரிகளிடம் முறையிட்டனர். இதன் அடிப் படையில், சில மாதங்களுக்கு முன்பு இந்திரா நகரில் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி கள் தொடங்கப்பட்டன. ஜல்சக்தி திட்டத் தின் கீழ் இங்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், சாலை  அமைக்கும் பணியின் போது குடிநீர்க் குழாய்கள் சேதமடைந்தன. இதனால் கடந்த சில மாதங்களாக இப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் முற்றிலும் நின்று போனது. ஊராட்சி மூலம் வழங்கப் படும் நீரும், ஒகேனக்கல் குடிநீரும் கிடைக்கவில்லை. குடிநீர் இன்றி கடும் சிரமங்களை சந்தித்து வரும் இந்திரா நகர் மக்கள், தங்கள் அன்றாடத் தேவைக்காக விவ சாயக் கிணறுகளுக்கு சென்று குடிநீர் எடுத்துவர வேண்டிய அவல நிலைக் குத் தள்ளப்பட்டுள்ளனர். குடிநீர்ப் பிரச் சனையை உடனடியாகத் தீர்க்கும் வகை யில், இந்திரா நகர் காலனிக்கு மேல் நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைத்து, ஒகேனக்கல் குடிநீர் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.