திண்டல், செங்கோடம்பாளையம் பகுதி மக்கள் அவதி!
ஈரோடு, ஜூலை 29– ஈரோடு மாநகராட்சி பொது சுகா தாரப் பிரிவில் நிலவி வரும் சீர்கேட் டால், திண்டல் மற்றும் செங்கோடம் பாளையம் (வார்டுகள் 19 மற்றும் 30) பகுதிகளில் பெரும் சுகாதார அச்சுறுத் தலை ஏற்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் சிட்டி என பெருமை பேசப்படும் ஈரோட்டில், அடிப்படை சுகாதாரப் பணி கேள்விக் குறியாகியுள்ளது. பொதுவாக, மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் இலகு ரக நான்கு சக்கர வாகனங்கள் மூலம் வீடு வீடாகக் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, தரம் பிரிக் கப்பட்டு, பின்னர் பெரிய லாரிகள் மூலம் உரம் தயாரிக்கும் மற்றும் மறுசுழற்சி செய்யும் இடங்களுக்கு அனுப்பப்ப டும். ஆனால், மூன்றாவது மண்டலத்திற் குட்பட்ட 19 மற்றும் 30வது வார்டுகளில் இப்பணிகள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன. முன்பு மூன்று வாகனங்கள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு வாகனம் மட்டுமே இயங்குகிறது. அது வும் ஒலிபெருக்கி இல்லாமல் இயக்கப் படுவதால், தூய்மைப் பணியாளர்கள் விசில் அடித்துக்கொண்டே செல்ல வேண்டிய நிலை உள்ளது. நகர்ப் புறங்களில், குறிப்பாக அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இந்த விசில் சத்தம் எடுபடாததால், அனைத்து வீடுகளிலும் குறிப்பிட்ட நேரத்தில் குப்பை சேகரிப் பது சாத்தியமற்றதாகி, பணியாளர்க ளுக்கு வேலைப்பளு கூடுகிறது. மேலும், சேகரிக்கப்பட்ட குப்பை களை அடுத்த இடத்திற்குக் கொண்டு செல்லும் கனரக வாகனமும் பழுதடைந் துள்ளதால், குப்பைகள் சேகரிக்கும் இடங்களிலேயே தேங்கிக் கிடக்கின் றன. போதுமான கொள்கலன்கள் இல் லாததால், குப்பைகள் தரையில் கொட் டப்பட்டு துர்நாற்றம் வீசி, ஈ தொல்லை அதிகரித்து வருகிறது. பொது சுகா தாரத்தில் ஈரோடு மாநகராட்சி நிர்வா கம் அலட்சியமாகச் செயல்படுவதாக தூய்மைப் பணியாளர்களும், பாதிக்கப் பட்ட மக்களும் குமுறுகின்றனர். வாராந் திர குறைதீர் கூட்டங்களை நடத்தும் மாந கராட்சி, இந்தப் பிரச்சனைக்கு போர்க் கால அடிப்படையில் தீர்வு காண வேண் டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.