பென்சன் திட்ட சட்டத்தை உடனடியாக திரும்பப்பெறுக ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு ஆர்ப்பாட்டம்
தருமபுரி, அக்.10- பென்சன் திட்ட சட்டத்தை உடன டியாக திரும்பப்பெற வலியுறுத்தி தில்லியில் நடைபெற்ற பேரணிக்கு ஆத ரவாக, தமிழ்நாடு முழுவதும் ஓய்வூதி யர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பென்சன் விதிகளில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி வெள்ளி யன்று, இந்தியா முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தேசிய ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அதன்படி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஒருங்கிணைப்புக் குழு மாவட்டத் தலைவர் டி.பாஸ்கரன் தலைமை வகித்தார்.
இதில் மாவட்டச் செயலாளர் பி.சுப்பிரமணியன், மின் ஊழியர் ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி, போக்கு வரத்து கழக ஓய்வூதியர் சங்க மாநில இணைச்செயலாளர் கே.கருப்புசாமி, அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பழனிசாமி, செயலாளர் எம்.பெருமாள், எல்ஐசி ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.மாதேஸ்வரன், பிஎஸ்என்எல் அதிகா ரிகள் ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலை வர் ஊமை.ஜெயராமன், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க தலைவர் ஆர்.சுப்பிர மணி, தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மண்ட லச் செயலாளர் ரத்தினவேல், பிஎஸ் என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் பி.கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் ரயில்வே கோட்ட மேலா ளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கே.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். ஒருங்கிணைப் புக்குழு கன்வீனர் கே.ஆர்.கணேசன் துவக்கவுரையாற்றினார். இதில் ஒருங் கிணைப்புக்குழு மாவட்டத் தலைவர் பி.வேணுகோபால், டிஆர்பியு செயல் தலைவர் எஸ்.சாம்பசிவம், கோட்டச் செயலாளர் சி.முருகேசன் மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் நேதாஜி சுபாஷ், முருகபெருமாள், எஸ்.தமிழ்மணி, ஆர்.பலராமன், சண் முகம், பிரபாவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு ஈரோடு தலைமை அஞ்சலக வளா கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஒருங்கிணைப்புக்குழு மாவட்டச் செயலாளர் பி.சின்னச்சாமி தலைமை வகித்தார். ஏஐபிடிபிஏ மாநில உதவித் தலைவர் என்.குப்புசாமி, மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஊழி யர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் சி.பரமசிவம் ஆகியோர் கண்டனவுரை யாற்றினர். இதில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலா ளர் என்.மணிபாரதி, ஓய்வுபெற்ற கல் லூரி ஆசிரியர் சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.ஜெயசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில், மின் வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப் பின் மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.பெரியசாமி நன்றி கூறினார். கோவை கோவை பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத் திற்கு, மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாவட்டத் தலைவர் மீனாட்சி சுந்தரம், பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலா ளர் ஏ.குடியரசு, பிடபிள்யுஏ மாவட்டத் தலைவர் ராபர்ட் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் ஒருங்கிணைப்புக் குழு மாவட்டச் செயலாளர் என்.அரங்க நாதன், கன்வீனர் எஸ்.கருணாநிதி, பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்க அகில இந்திய அமைப்பு செயலாளர் வெங்கட்ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செய லாளர் அருணகிரி நன்றி கூறினார்.
