போதிய இருக்கைகள் இல்லாததால் பயணிகள் அவதி
சேலம், ஜூலை 18- வாழப்பாடி பேருந்து நிலையத்தில் போதிய இருக்கை வசதிகள் இல்லா ததால், பயணிகள் அவதிக் குள்ளாகி வருகின்றனர். சேலம் மாவட்டம், வாழப் பாடி பேருந்து நிலையத்திற் கும் தினந்தோறும் 250க்கும் அதிகமான அரசு மற்றும் தனியார் பேருந்து களும், ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்கின்றனர். பயணிகளின் நலன் கருதி, பேருந்து தளமேடை மற்றும் மேல் தளத்தில் சிறு வணிகக் கடைகள், வாகனங் கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளுடன், ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.8.70 கோடியில் நவீன ஈரடுக்கு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த பேருந்து நிலையத்துக்குள் பேருந்துக் காக காத்திருக்கும் பயணிகள் அமர்வதற்கு போதிய இருக்கை வசதிகள் இல்லை. இத னால், ஏராளமான பயணிகள் பேருந்து நிலை யத்தின் மையத்தில் இருபுறமும் காணப்படும் நடைமேடை திட்டுகளில் அமர்கின்றனர். இத னால் பேருந்துகள் பயணிகள் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, போதிய இருக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.