tamilnadu

மாணவி ‘பெல்ட் அணியவில்லை’ எனக்கூறி தாக்குதல் தனியார் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

மாணவி ‘பெல்ட் அணியவில்லை’ எனக்கூறி தாக்குதல் தனியார் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

நாமக்கல், செப்.9- ‘பெல்ட் அணியவில்லை’ எனக்கூறி, மாண வியை அடித்த பள்ளி தாளாளர் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி, பள்ளியை பெற் றோர் முற்றுகையிட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் -  திருச்செங்கோடு சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், 150க்கும் மேற் பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இப் பள்ளியில், ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த  7 வயதுடைய மாணவி 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், திங்களன்று பள் ளிக்கு வந்த மாணவி, பெல்ட் அணியவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்த பள்ளி யின் தாளாளர் கோமளா என்பவர், குழந்தை யின் முதுகில் பலமாக தாக்கியதாக கூறப் படுகிறது. இதில் குழந்தையின் முதுகுப்பகுதி முழுவதும் முழுமையாக சிவந்து காணப் பட்ட நிலையில், அழுது கொண்டே இது குறித்து குழந்தை தனது பெற்றோரிடம் தெரி வித்துள்ளார். இதையடுத்து செவ்வாயன்று காலை பள்ளிக்கு வந்த குழந்தையின் பெற் றோர், பள்ளியை முற்றுகையிட்டு அங்கிருந்த  ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த பள்ளிபாளையம் போலீசார், விசா ரணை மேற்கொண்டனர். இனிவரும் நாட்க ளில் இது போல் நடக்காது என பள்ளி தரப் பில் உறுதியளிக்கப்பட்டது.