எந்த பதவிக்கும் தகுதியற்றவர் பழனிச்சாமி திமுக உடுமலை நகரச் செயலாளர் காட்டம்
திமுக உடுமலை நகரச் செயலாளர் காட்டம்
உடுமலை, ஜூலை. 10 – கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்பதை விரும்பாத ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு தான் எடப்பாடி பழனிச்சாமி பேசியது என திமுக உடுமலை நகர செயலாளர் சி. வேலுச்சாமி கடுமையாகக் கண்ட னம் தெரிவித்துள்ளார். கோயில் நிதிகளைக் கொண்டு கல்லூரிகள் கட்டுவது சதிச்செயல் என எடப்பாடி பழனிச்சாமி பேசி யுள்ளதற்கு பல்வேறு தரப்பில் இருந் தும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. உதாரணமாக, பல ஆயிரம் கிரா மப்புற மாணவர்களின் கல்விக்கும் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் ஆதா ரமாகத் திகழும் உடுமலை அரசு கலைக்கல்லூரி, பழனி தண்டாயுத பாணி தேவஸ்தானத்தின் நிதி உதவி யுடன் தொடங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது. 1970-ல் இக்கல்லூரி உடு மலையில் தொடங்க திட்டமிடப்பட்ட போது, பழனி கோயில் சார்பில் முதற் கட்டமாக ரூ. ஒரு லட்சம் நன்கொடை யாக வழங்கப்பட்டது. பழனிசாமி யின் பேச்சுப்படி இந்த “சதிச் செய லால்” பல ஆயிரம் முதல் தலைமுறை பட்டதாரிகள் உருவாகி உள்ளனர். இக்கல்லூரியின் முன்னாள் மாண வர்கள் பல்வேறு அரசுத் துறைகளில் உயர்பதவிகளில் உள்ளனர். மடத் துக்குளம் அதிமுக சட்டமன்ற உறுப் பினர் மகேந்திரனும் இந்தக் கல் லூரியில்தான் படித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து திமுக உடுமலை நகர செயலாளர் சி. வேலுச்சாமி கூறு கையில், “அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட் டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தல்” என்ற மகத்தான தமிழ் பாரம் பரியத்தில், கல்விக்கு எப்போதும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந் துள்ளது. “இதை உணராமல், கிராமப்புற மாணவ மாணவியர் கல்வி கற்பதை விரும்பாத ஆதிக்க மனப்பான்மையு டன் பழனிசாமி பேசியது கடும் கண்டனத்திற்குரியது. இதன் மூலம் அவர் எந்தப் பதவிக்கும் தகுதியற்ற வர் என்பது உறுதியாகிறது,”. உடு மலையில் பழனி முருகன் கோயில் நிதியில் இருந்து 1970-ல் தொடங்கப் பட்ட அரசு கலைக்கல்லூரியில், உடு மலை, பொள்ளாச்சி, தாராபுரம் மற் றும் மடத்துக்குளம் பகுதிகளில் இருந்து கிராமப்புற ஏழை மாண வர்கள் உயர்கல்வி பெற்று வரு கின்றனர். இந்த மாணவர்களின் எதிர் காலத்தைப் பாழக்கும் வகையில் பழனிசாமி பேசியது அவரது சுய ரூபத்தை வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் நான்கு ஆண்டு களாக நல்லாட்சி நடத்தி வரும் முதல்வரின் திட்டங்களைக் குறை சொல்ல முடியாமல், “கூடா நட்பு கேடில் முடியும்” என்பதைப் போல பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தவுடன் எதை பேசுவது என்று தெரியாமல், மாணவர்கள் கல்வி கற்பதைத் தடுக்கும் சங்கிசாமியாக பழ னிசாமி மாறியுள்ளார் என்று வேலுச் சாமி கடுமையாக விமர்சித்தார்.