tamilnadu

img

வங்கிகளின் பங்குகளை விற்க எதிர்ப்பு

வங்கிகளின் பங்குகளை விற்க எதிர்ப்பு

சேலம், ஆக. 7 – தமிழ்நாடு கிராம வங்கிகளின் பங்குகளை ஒன்றிய அரசு விற் பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் கிராம வங் கிகள் அதிக எண்ணிக்கையில் செயல்பட்டு வருகிறது. 40 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு கிராம வங்கிகள் செயல் பட்டு வருகிறது. இதில், 12 லட்சம் கோடி வணிகம் நடைபெற்று வருகி றது. இந்த வங்கியின் பங்குகளை ஒன்றிய அரசு விற்பனை செய்ய முயற்சித்து வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஒன்றிய அரசு தமிழ்நாடு கிராம வங்கியின் பங்குகளை விற்பனை செய்யக்கூடாது. தொடர்ந்து கிராம  வங்கிகளாகவே செயல்பட வேண் டும் என வலியுறுத்தி தமிழ்நாடு கிராம வங்கி அலுவலர் சங்கம் கிராம வங்கி ஊழியர் சங்கம் கிராம  வங்கி அதிகாரிகள் சங்கம் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர்.  அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள  கிராம வங்கி தலைமை அலுவலகம்  முன்புறம் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். கிராம வங்கி அலு வலர் சங்கத்தின் தலைவர் ஆண்டோ தலைமையில் நடை பெற்ற போராட்டத்தில் செயலாளர் அறிவுரை நம்பி அகில இந்திய தலைவர் அஸ்வத், இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொருளாளர் லட்சுமி நாராயணன், அதிகாரிகள் சங்க செயலாளர் மெய்ஞான சேகர், உள்ளிட்டு பலர் பங்கேற்ற னர்.