சாலையோரம் உள்ள பழைய கார்கள் பறிமுதல்
மேட்டுப்பாளையம், ஆக.13- மேட்டுப்பாளையம் - சக்தி சாலையில் பழைய இரும்பு கடை பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய கார்களை கிரேன் உதவியு டன் போலீசார் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திலி ருந்து சத்தியமங்கலம் செல் லும் சாலையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பழைய இரும்பு கள் வாங்கி விற்கும் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு கார், வேன் போன்ற நான்கு சக்கர வாகனங்களின் பயன்படுத்தப்பட்ட பழைய உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த கடைகளில் விபத்தில் சிக்கி சிதைந்த வாகனங்களை வாங்கி உடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் விபத்தில் சிக்கிய மற் றும் பயன்படுத்த முடியாத பழைய வாகனங்களை வாங்கும் இக்கடை வியாபாரிகள் இவற்றை வரிசையாக சாலையோரம் நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து நெருக்கடி மற்றும் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து மேட்டுப்பாளையம் காவல்துறையினருக்கு புகார் வந்த நிலையில், செவ்வாயன்று மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சின்ன காம்பண்ணன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் போக்குவரத்து உதவியாளர் சதீஷ் பாபு மற்றும் போக்குவரத்து போலீசார் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி னால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அபராதமும் விதிக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.