tamilnadu

img

முள்ளுவாடி கேட் பகுதியில் பாலம்  அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு

முள்ளுவாடி கேட் பகுதியில் பாலம்  அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு

சேலம், ஆக.29- சேலம், முள்ளுவாடி கேட் பகுதியில் பாலம்  அமைப்பது தொடர்பாக ரயில்வே கட்டுமானப் பிரிவு அதிகாரிகள் வியா ழனன்று ஆய்வு செய்த னர். சேலம் மாநகரின், மேற்கு மற்றும் வடக்குப் பகுதி களை இணைக்கும் முக்கியச் சாலையாக பிரெட்ஸ் சாலை  உள்ளது. குறிப்பாக, ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவ மனை, பிரசித்தி பெற்ற கோவில்கள், பழைய பேருந்து நிலை யம் ஆகிய நகரின் முக்கியப் பகுதிகளை இச்சாலை இணைக் கிறது. இந்நிலையில், ரயில் வந்து செல்லும் நேரங்களில் முள்ளுவாடி ரயில்வே கேட் மூடப்படுவதால், பிரெட்ஸ் சாலை யின் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, முள்ளுவாடி பிரெட்ஸ் சாலையில், ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண் டும் என்ற கோரிக்கை எழுந்தது.  இதையடுத்து, பிரெட்ஸ் சாலையில் ஆட்சியர் அலுவல கத்தை அடுத்துள்ள கால்நடை இணை இயக்குநர் அலுவல கம் அருகே தொடங்கி, தொங்கும் பூங்கா வரை 600 மீட்டர்  தொலைவுக்கு ரயில்வே மேம்பாலம் அமைக்க திட்டமிடப் பட்டு, ரூ.21.16 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, தற் போது, மேம்பால கட்டுமானத்துக்கான ஆரம்பகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து ரயில்வே கட்டுமானப்பிரிவு அதிகாரிகள் வியாழனன்று ஆய்வு செய்தனர். விரைவில் மேம்பாலம் கட் டும் பணி தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்த னர்.