டிரம்புக்கு எதிராக வாய் திறக்காத மோடி செல்வப்பெருந்தகை சாடல்
கோவை, ஜூலை 31- நான்தான் போரை நிறுத்தினேன் என தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லி வருகிற நிலையில், அவருக்க எதிராக ஒரு வார்த்தை கூட பிரதமர் மோடியால் பேச வில்லை என்பது அவரது இயலாமையை காட்டுவதாக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டினர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் சட்டப்பேரவை பொது கணக்குகள் குழுவின் ஆய்வுக்கூட்டம் அதன் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் நடை பெற்றது. இதில் கோவை மாவட்டத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற கள ஆய்வு கள் குறித்து பல்வேறு துறை அதிகாரி கள் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசிக் கப்பட்டது. கூட்டத்திற்குப் பின்னர், செய்தியா ளர்களைச் சந்தித்த அவர், ஆய்வு கூட்டத் தில் பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டி ருப்பதாகத் தெரிவித்தார். அரசியல் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், இந்தியா-பாகிஸ்தான் போர் தொடர்பாக வெளிநாடுகளின் தலை யீடு இல்லை எனக் கூறுவதற்குப் பிரதம ருக்கு என்ன தயக்கம்?.. ட்ரம்ப் கூறிய கருத்துகளுக்கு ஏன் மறுப்பு தெரிவிக்க வில்லை?. ‘எங்கள் நாட்டின் விவகாரங்க ளில் தலையிட நீங்கள் யார்?’ என்று ஏன் கேட்கவில்லை?. முன்னாள் தலைவர்களான வாஜ்பாய், இந்திரா காந்தி ஆகியோர் இது போன்ற தருணங்களில் கேள்வி எழுப்பியுள் ளனர். அமெரிக்க அதிபருக்கும் இந்த போர் நிறுத்தத்திற்கும் சம்பந்தமில்லை என ஏன் வாய் திறக்க மறுக்கிறார்கள். ராகுல் காந்தி கேட்ட கேள்விகளுக்குப் பிரதமர் நேரடி யாகப் பதில் கூற வேண்டும். ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டத்தை இயற்ற வேண்டும் என காங்கி ரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 2014ஆம் ஆண்டே இது தொடர்பாக வலியு றுத்திய போதிலும், பாஜக அரசு அதனைச் சட்டமாக நிறைவேற்றவில்லை. விசாரணைக்குச் செல்பவர்கள் உயிரி ழப்பது தொடர்பான கேள்விக்கு, “நம் உயிர் கள் எந்த விதத்திலும் சேதாரம் ஆகக் கூடாது”. “முதலமைச்சர் நேர்மையாக அரசியல் செய் கிறார். அவருக்கு எந்த ஒரு குந்தகத்தையும் காவல்துறை விளைவிக்கக்கூடாது” என் றார்.