tamilnadu

img

போலியாக வாகன ஆயில் தயாரித்து விற்பனை

போலியாக வாகன ஆயில் தயாரித்து விற்பனை

சேலம், ஜூலை 4- பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி யாக வாகன ஆயில் தயார் செய்து, சேலம்  மாவட்டத்தில் விற்பனை செய்த வடமாநிலத் தைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்த னர். சென்னையிலுள்ள அறிவுசார் சொத் துரிமை அமலாக்கத்துறை அலுவலகத்தில் கல்ப் (GULF) என்ற பிரபல ஆயில் நிறுவனம்  சார்பில், தங்களது ஆயில் நிறுவனத்தின் பெயரில் போலியாக ஆயில் தயார் செய்து  சேலம் மாவட்டத்தில் விற்பனை செய்யப்படு வதாக புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து சேலம் அறிவுசார் சொத்துரிமை அமலாக் கத்துறை காவல்துறையினருக்கு ஆய்வு நடத்த உத்தரவிட்டப்பட்டது. அதன்பேரில், சேலம் ஆய்வாளர் கெஜலட்சுமி தலைமை யில் குழு அமைக்கப்பட்டு, மகுடஞ்சாவடி, ஓமலூர் பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், பிரபல ஆயில் நிறுவனத்தின் பெயரில் போலியாக  ஆயில் தயார் செய்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், விற்பனை செய்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பூமாராம் என்பவரை போலீசார் கைது செய்து  விசாரணை மேற்கொண்டனர். அதில், தில்லி யிலிருந்து குறைந்த விலையில் வாகன ஆயிலை வாங்கி, சேலத்தில் பல்வேறு பகுதி களில் அட் ப்ளூ நிறுவனம் மூலம், கல்ப் ஆயில்  என்ற பெயரில் போலியான ஸ்டிக்கரை ஒட்டி  விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து, அவரிடமிருந்து 400 லிட் டர் ஆயில் பறிமுதல் செய்தப்பட்டது. மேலும்,  இவருக்கு சொந்தமான கடைகளுக்கு சீல்  வைக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட  போலி ஆயில் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.