tamilnadu

img

3 மாதத்தில் ரூ.10,477 கோடிக்கு கடனுதவிகள் வழங்கல்

3 மாதத்தில் ரூ.10,477 கோடிக்கு கடனுதவிகள் வழங்கல்

சேலம், ஆக.30- சேலம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் – ஜூன் மாதங்களில் ரூ.10,477 கோடிக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட அளவிலான வங்கிகளின் முத லாம் காலாண்டிற்குரிய ஆய்வுக்கூட் டம், ஆட்சியர் ரா.பிருந்தாதேவி தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத் தில், ஆட்சியர் பேசுகையில், சேலம் மாவட்டத்தில் 234 பொதுத்துறை வங் கிக்கிளைகள், 199 தனியார் வங்கிகள், தமிழ்நாடு கிராம வங்கி, மாவட்ட கூட் டுறவு வங்கி உள்ளிட்ட 117 அரசு சார்ந்த  வங்கிகள் என மொத்தம் 550 வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. சேலம் மாவட் டத்தில் இவ்வங்கிகள் மூலம் 2025 - 26 நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டு முடிய ரூ.10,477.98 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. வேளாண்மை திட்டங்கள் மற்றும் மக ளிர் சுய உதவிக்குழுக்காக ரூ.5,461.61 கோடியும், சிறு, குறு தொழில் நிறுவ னங்களுக்கு ரூ.4,574.25 கோடியும், மாணவர்களுக்கு இதுவரை ரூ.20.74  கோடி கல்வி கடனுதவிகளும் வழங்கப் பட்டுள்ளன. மேலும், வங்கிகளின் பல் வேறு திட்ட செயல்பாடுகளை பொது மக்கள் அதிகளவில் அறிந்து பயன் பெறும் வகையில் நடவடிக்கைகளை  மேற்கொள்ள வேண்டும், என்றார். இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வாணி ஈஸ்வரி, ரிசர்வ் வங்கியின் மேலாளர் வம்சிதர் ரெட்டி, பாரத ஸ்டேட் வங்கியின் மண் டல மேலாளர் பிரித்திவிராஜ் சேத்தி,  முன்னோடி வங்கி மேலாளர் பி.செந்தில் குமார் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.