tamilnadu

img

அந்நிய முதலீடு, ஜி.எஸ்.டி வரி நீக்கக் கோரிக்கை எல்.ஐ.சி ஊழியர் சங்கத்தின் பிரச்சார இயக்கம்

அந்நிய முதலீடு, ஜி.எஸ்.டி வரி நீக்கக் கோரிக்கை எல்.ஐ.சி ஊழியர் சங்கத்தின் பிரச்சார இயக்கம்

சேலம், ஜூலை 28 – இன்சூரன்ஸ் துறையில் அந்நிய  முதலீட்டை அனுமதிக்க முடியாது, பிரிமியத்திற்கு ஜிஎஸ்டி வசூலிப் பதை ஏற்க முடியாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இன்சூரஸ் ஊழியர் சங்கத்தின் சார் பில் பிரச்சார இயக்கம் சேலத்தில் நடைபெற்றது. தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் 36 ஆவது மாநாடு ஆகஸ்ட் 9, 10, 11 ஆகிய தேதிகளில் சேலத்தில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டின் நோக் கங்கள் குறித்து மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பிரச் சார இயக்கம் இன்சூரன்ஸ் ஊழியர்  சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட் டது. சேலம் மாவட்டம் ஆத்தூரில் துவங்கிய இந்த பிரச்சாரம், நாமக் கல் மாவட்டத்தில் உள்ள நாமகிரிப் பேட்டை, ராசிபுரம், ஆண்டலூர் கேட், நாமக்கல், மோகனூர், பர மத்தி வேலூர், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், வெப்படை, சங்க கிரி மற்றும் சேலம் பழைய பேருந்து  நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகு திகளில் பிரச்சாரம் மேற்கொண் டது.  பிரச்சாரத்தில், காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முத லீட்டை (FDI) அதிகரிக்கக் கூடாது,  காப்பீட்டு பிரீமியங்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை நீக்க வேண்டும்,  எல்.ஐ.சி-யில் புதிய ஊழியர் களை நியமிக்க வேண்டும் உள் ளிட்டவைகள் வலியுறுத்தப்பட் டன. பிரச்சாரத்தின் போது ஆயி ரக்கணக்கான துண்டுப் பிரசுரங் கள் விநியோகிக் கப்பட்டன. இந்த பிரச்சாரப் பயணத்தை தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழி யர் கூட்டமைப்பின் துணைத் தலை வர் ஆர்.தர்மலிங்கம் துவக்கி வைத் தார். காப்பீட்டுக் கழக ஊழியர் சங் கம் சேலம் கோட்டத்தின் இணைச் செயலாளர் கணேச பாண்டியன் தலைமையில் பிரச்சாரம் நடை பெற்றது. வழிநெடுகிலும் விவசாய  சங்கங்கள், விவசாயத் தொழிலா ளர்கள், சி.ஐ.டி.யு சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம், மாதர்  சங்கம், மத்தியதர ஊழியர் அமைப் புகள், எல்.ஐ.சி முகவர்கள், வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் பிற  அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டு பிரச்சாரத்திற்கு வரவேற் பளித்தனர். தருமபுரி இதேபோன்று, தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப் பின் 36- ஆவது மாநாட்டையெட்டி காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின்  சார்பில் தருமபுரி மாவட்டம் முழு வதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தருமபுரி பிஎஸ்என்எல் அலுவ லகம் முன்பு துவங்கிய பிரச்சாரத் திற்கு கிளை தலைவர் சந்திர மௌலி தலைமை வகித்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ. குமார், மாவட்ட செயலாளர் இரா. சிசுபாலன், சிஐடியு மாவட்ட செய லாளர் பி. ஜீவா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ. தெய்வானை, காப்பீட்டு கழக  ஊழியர் சங்க முன்னாள் கோட்ட  தணைத்தலைவர் ஏ. மாதேஸ்வ ரன், எல்ஐசி ஓய்வுபெற்றோர் அமைப்பின் தலைவர் சோமசுந்த ரம் மற்றும் முகவர்கள் சங்கத்தின் தலைவர்கள், எல்ஐசி வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தினர் என திர ளானோர் பங்கேற்று வரவேற்பளித் தனர். இப்பிரச்சார இயக்கம், தரும புரி, பாலக்கோடு அரூர், பாப்பாரப் பட்டி, பென்னாகரம் நல்லம்பள்ளி  உள்ளிட்ட பல்வேறு இடங்களில்  பிரச்சாரம் மேற்கொண்டது.