tamilnadu

img

அமெரிக்க அரசின் வரி விதிப்பிற்கு எதிர்ப்பு இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

அமெரிக்க அரசின் வரி விதிப்பிற்கு எதிர்ப்பு   இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

சேலம், செப். 7- அமெரிக்க அரசின் 50 சதவிகித வரிவிதிப்பை கண்டித்து சேலத்தில், இடதுசாரி கட்சிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் ஞாயிறன்று நடை பெற்றது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்திய பொருட்களின் மீது 50 சதவிகித வரியை விதித்துள்ளார். இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கெதிராக கண்டனம் முழங்க இடதுசாரி கட்சிகள் அறைகூவல் விடுத்திருந்தது. இதன்ஒருபகுதியாக சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.மோகன், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.குமார், சிபிஐ (எம்எல்) மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் ஆகியோர் ஆரப்பாட்டத்திற்கு தலைமை ஏற்றனர். இதில், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்து கண்ணன், சிபிஐ (எம்எல்) மத்தியக் கமிட்டி உறுப்பினர் எ.சந்திரமோகன், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் ஏ.கந்தன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில், திரளானோர் பங்கேற்றனர்.