நில மீட்பு போராளி பெரியசாமி காலமானார்
நாமக்கல், ஜூலை 25- நில மீட்பு போராளி தோழர் பேளுக்குறிச்சி பெரியசாமி (89) உடல் நலக்குறைவால் வெள்ளி யன்று காலமானார். நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சி பகுதி யைச் சேர்ந்த பெரியசாமி மற்றும் அவரது மனைவி தங்கம்மாள் ஆகி யோர், 1975 இல் ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தில், ஆத்தூர் தாலுகா, ராம நாயக்கன்பாளையம் பகுதியில் நடைபெற்ற நில மீட்பு போராட்டத் தில் பங்கேற்றவர்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் தங்களை இணைத்துக் கொண்டு செயல்பட துவங்கினர். குடும்ப சூழல் காரண மாக சொந்த கிராமமான பேளுக் குறிச்சிக்கு திரும்பிய பெரியசாமி, ராசிபுரம் தாலுகாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவ சாயிகள் சங்கத்தை கட்டும் முயற்சி யில் இறங்கினர். 1995 ஆம் ஆண்டு கொல்லிமலை அடிவாரம் பைல்நாடு பகுதியில் 250க்கும் மேற்பட்ட விவ சாயத் தொழிலாளர்களோடு, நில மீட்பு போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார். போலீசார் துப் பாக்கி முனையில் மிரட்டி அச்சுறுத்தி யுள்ளனர். எந்த விதமான அச்சு றுத்தலுக்கும் அஞ்சா மல் கையில் செங்கொ டியை ஏந்தியவாறு, ‘நாங்கள் நில போராட் டம் நடத்துவதற்கு தான் வந்தோம். எங் களை இங்கேயே சுட் டுக் கொன்றாலும் எங் களுக்கு கவலை யில்லை. நாங்கள் இங்கிருந்து போக மாட்டோம்’ என்று உறுதியோடு நின்று, எட்டு ஆண்டு காலம் வனத் துறை போட்ட பொய் வழக்கை எதிர்த்து போராடி வெற்றி கண்ட வர். தனது இறுதி காலம் வரை பெரிய சாமியும், அவரது மனைவி தங்கம் மாள் ஆகியோர் மார்க்சிஸ்ட் கட்சி யில் தொடர்ந்து செயல்பட்டு வந்த னர். இந்நிலையில், தோழர் பெரிய சாமி உடல்நலக்குறைவால் வெள்ளி யன்று காலமானார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, ராசி புரம் வடக்கு ஒன்றியச் செயலாளர் அறிவுடைநம்பி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.துரைசாமி, பி. செல்வராஜ் உள்ளிட்ட தலைவர்கள் அவரது இல்லத்திற்கு சென்ற நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத் தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.