tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தை மீட்பு

சேலம், செப்.10- சேலத்தில் காவல் நிலையம் அருகே கடத்தப்பட்ட 9  மாத பெண் குழந்தை நாமக்கலில் பத்திரமாக மீட்கப்பட் டது. சேலம் மாவட்டம், பஞ்சதாங்கி ஏரி பகுதியைச் சேர்ந்தவர் மதுரை. இவர் தனது மனைவி பிரியா, 9 மாத  பெண் குழந்தை ரித்திகா மற்றும் உறவினர்களுடன், அழ காபுரம் காவல் நிலையம் அருகே உள்ள மேம்பாலத் தின் அடியில் தங்கியிருந்து கூடை பின்னும் தொழில் செய்து வருகிறார். கடந்த செப்.4 ஆம் தேதி நள்ளிரவு தாயின் அருகே தூங்கிக் கொண்டிருந்த குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்து, அக் கம் பக்கத்தில் தேடியுள்ளார். எங்கு தேடியும் குழந்தை  கிடைக்காததை நிலையில், அழகாபுரம் காவல் நிலை யத்தில் புகாரளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து குழந்தை கடத் தல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குறித்து தீவிர தேடுதல்  வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவு களை ஆய்வு செய்ததில், இருசக்கர வாகனத்தில் ஒருவர்  குழந்தையுடன் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. வாகனத்தின் பதிவெண் கொண்டு அதன் உரிமை யாளரை தேடிய போது பொள்ளாச்சியை சேர்ந்த ரமேஷ்  என்பது தெரியவந்தது. அவரது செல்போன் இருப்பிடத் தைக் கண்டறிந்த போலீசார், நாமக்கல் விரைந்து சென்று  ரமேஷை பிடித்துள்ளனர். அப்போது திருடு போன  குழந்தை அவருடன் இருந்தது கண்டறிந்து மீட்கப்பட் டது. விசாரணையில் ரமேஷுக்கு திருமணமாகி இரண்டு  மனைவிகள் இருப்பதும், அவருக்கு குழந்தைகள் இல்லாததால் அஸ்தம்பட்டி பகுதியில் தங்கியிருந்து நோட்டமிட்டு இந்த குழந்தை கடத்தல் சம்பவத்தை அரங் கேற்றியது தெரியவந்துள்ளது.

பாலியல் வன்கொடுமை - தந்தை கைது

உதகை, செப்.10- கோத்தகிரியில், குடிபோதையில் தன் 15 வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த தந்தையைப்  போக்க்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து  சிறையில் அடைத்தனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரியைச் சேர்ந்த 40 வயது  நபர், ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணி புரிந்து வருகிறார். இவருக்கு 18 மற்றும் 15 வயதில்  இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் கல்லூரி யிலும், இளைய மகள் பள்ளியிலும் படித்து வருகின்ற னர். சம்பவத்தன்று, மதுபோதையில் வீட்டிற்கு வந்த  அந்த நபர், தன் 15 வயது மகளைப் பாலியல் வன் கொடுமை செய்துள்ளார். இந்த விஷயம் குறித்து யாரிட மும் கூறக் கூடாது என மகளுக்குக் கொலை மிரட்டலும்  விடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுமி, இது குறித்து யாரிடமும் தெரிவிக்கவில்லை. சில நாட்களுக்குப் பிறகு, சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கோத்தகிரி அரசு மருத்துவமனை யில் பரிசோதனை செய்ததில், சிறுமி கர்ப்பமாக இருப் பது தெரிய வந்தது. மேலும், மதுபோதையில் அவரது  தந்தையே பாலியல்வன்கொடுமை செய்தது உறுதியா னது. இதனைத் தொடர்ந்து, சிறுமி மேல் சிகிச்சைக்காக  ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து குன்னூர் அனைத்து மகளிர்  போலீஸார் விசாரணை நடத்தி, புதன்கிழமை போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிறுமியின் தந்தையைக் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

அணைகளின் நிலவரம்

பவானிசாகர் அணை      நீர்மட்டம்:100.92/105அடி நீர்வரத்து:3357கனஅடி நீர்திறப்பு:3350கனஅடி

மேட்டூர் அணை                  நீர்மட்டம்:119/120அடி நீர்வரத்து:11275கனஅடி நீர்திறப்பு:15800கனஅடி

சோலையார் அணை       நீர்மட்டம்:159.19/160அடி நீர்வரத்து:808கனஅடி நீர்திறப்பு:452.48கனஅடி

பரம்பிக்குளம் அணை    நீர்மட்டம்:71.71/72அடி நீர்வரத்து:1030கனஅடி நீர்திறப்பு:1057கனஅடி

ஆழியார் அணை              நீர்மட்டம்:119/120அடி நீர்வரத்து:620கனஅடி நீர்திறப்பு:661கனஅடி