tamilnadu

img

கருவம்பாளையம் வே.கிட்டப்பன் 34 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

கருவம்பாளையம் வே.கிட்டப்பன்  34 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

திருப்பூர், செப். 13 – திருப்பூர் கருவம்பாளை யம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த  தோழர், முன்னாள் நகர்மன்ற  உறுப்பினர் வே.கிட்டப்பன் 34ஆவது ஆண்டு நினைவு  தினம் சனியன்று கடைப்பி டிக்கப்பட்டது. கருவம்பாளையம் மார்க்சிஸ்ட் கட்சி கிளை அலு வலகம் முன்பு வே.கிட்டப் பன் படம் வைக்கப்பட்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் தெற்கு மாந கரக்குழு உறுப்பினர் ஜி.சுரேஷ்குமார் தலை மையில், சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்  சங்க மாவட்டத் தலைவர் எம்.ராஜகோபால், கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளர் டி. ஜெயபால், முன்னாள் சோசலிஷ்ட் வாலிபர் முன்னணி நிர்வாகி தி.ச.குப்புசாமி, கட்சி யின் கருவம்பாளையம் தெற்கு கிளைச் செய லாளர் பி.கோபால் ஆகியோர் வே.கிட்டப் பன் பணிகளை நினைவு கூர்ந்து பேசினர், இதில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துக்கண்ணன், மாவட்டக்குழு உறுப் பினர் ஆர்.மைதிலி, மாநகரக்குழு உறுப்பி னர்கள் பா.ஞானசேகரன், சஞ்சீவ், செல்ல முத்து, கல்கி, சாலையோர வியாபாரிகள் சங்கச் செயலாளர் பி.பாலன் ஆட்டோ சங்க  மாவட்டச் செயலாளர் சிவராமன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஜி.ஈஸ்வரமூர்த்தி உள்பட கருவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தி னர்.