tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

இரு வேறு இடங்களில் நகை, பணம் கொள்ளை!

நாமக்கல், செப்.29- நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் அதன்  சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து நடந்த இரண்டு  கொள்ளைச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளன.  வெப்படை காமராஜர் நகரைச் சேர்ந்த எலக்ட்ரிஷி யன் பிரபாகரன் என்பவர், கடந்த ஞாயிறன்று இரவு குடும்பத்துடன் திருப்பூர் கோயிலுக்குச் சென்றிருந் தார். இதைத் தெரிந்துகொண்ட கொள்ளையர்கள், பூட்டை உடைத்து வீட்டிற்குள் நுழைந்து சுமார் 10  பவுன் நகை மற்றும் 8,000 ரூபாய் பணத்தைத் திருடிச்  சென்றுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வெப்படை போலீசார், கொள்ளையர்கள் பூட்டை உடைக்கப் பயன்படுத்திய திருப்புளியைக் (ஸ்க்ரூடிரைவர்) கைப்பற்றி விசா ரணை நடத்தி வருகின்றனர். இதேபோல, பள்ளிபாளையம் ஆர்.எஸ்.ரோடு பகுதி யில் வசிக்கும் முருகன் என்பவரின் வீட்டில் சனிக்கிழமை  (அக்டோபர் 26) இரவு கொள்ளைச் சம்பவம் நடந்துள் ளது. அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பின்புற மாக ஏறி, மாடி வழியாக உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த சுமார்  5 பவுன் நகை, ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும்  18,000 ரூபாய் மதிப்புள்ள செல்போன் ஒன்றைத் திருடிச்  சென்றுள்ளனர். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீ சார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள  சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளை யர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் இந்தச்  சமயத்தில், இரண்டு நாட்களுக்குள் இரு வேறு  இடங்களில் நடந்த இந்தக் கொள்ளைச் சம்பவங்க ளால் பள்ளிபாளையம் பகுதி மக்கள் மத்தியில் அச்ச மும் பதற்றமும் நிலவுகிறது. இரண்டு வழக்குகளிலும் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாத நிலை யில், பள்ளிபாளையம் மற்றும் வெப்படை போலீசார் தனித்தனி குழுக்களை அமைத்து கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

விளைநிலம் அபகரிப்பு முயற்சி மாவட்ட நிர்வாகத்தில் மனு

ஈரோடு, செப். 29- ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே சுமார்  100 ஆண்டுகளாக அனுபவத்தில் உள்ள விளைநிலத்தை  அரசு கையகப்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டி,  ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  திங்களன்று விவசாயி ஒருவர் முறையிட்டார். மொடக்குறிச்சி வட்டம், எலவநத்தம் கிராமம், ஞான புரம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுத்த மனுவில் தெரி வித்துள்ளதாவது: “எனது தகப்பனாரின் தந்தையான கருப்பன் என்பவருக்கு வடுகப்பட்டி நிலக் குடியேற்ற  சங்கத்தின் மூலம் ஒன்றரை ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அன்று முதல் நாங்கள் தலைமுறை தலைமுறையாக இந்த நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வரு கிறோம். இந்த நிலத்துக்குப் பட்டா கேட்டு விண்ணப் பித்துள்ளோம்; அது இன்னும் நிலுவையில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில், கடந்த சில நாட்க ளுக்கு முன்பு, இந்த விளைநிலத்தை அரசு கையகப்ப டுத்தவுள்ளதாகக் கூறி, அதிகாரிகள் எவ்வித முன்ன றிவிப்பும் இன்றி இயந்திரங்கள் மூலம் நிலத்தில் இருந்த  மரம், செடி, கொடிகளை அகற்றினர். சுமார் 90 ஆண்டுக ளுக்கும் மேலாக எங்கள் அனுபவத்தில் இருக்கும் விவ சாய நிலத்தை இவ்வாறு அபகரிக்க முயல்வது  எங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் கேள்விக்குறி யாக்கியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடன டியாக இந்த கையகப்படுத்தும் நடவடிக்கையைக் கைவிட்டு, உரிய விசாரணை மேற்கொண்டு, எங்கள் குடும்பத்துக்கு நியாயம் வழங்க வேண்டும்” என்று அவர்  அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

பங்கு வர்த்தகத்தில் அதிக லாபம்  என ரூ1.12 கோடி மோசடி

கோவை, செப்.29- பங்கு வர்த்தகத்தில் அதிக லாபம் எனக் கூறி  கோவையை சேர்ந்த இருவரிடம் ரூ1.12 கோடி மோசடி  குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், பீளமேடு பகுதியை சேர்ந்த வர் தியாகராஜன் (46). இவர் ராவத்தூர் பிரிவு அருகே  மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் தியாகராஜனின் செல்போன் எண் ஒரு  வாட்ஸ் அப் குழுவில் இணைக்கப்பட்டுள்ளது. அதில் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் இருக் கலாம் என்ற விளம்பரங்களும் அடிக்கடி போடப் பட்டது. தொடர்ந்து அக்குழுவில் இருந்த நபர்கள் தங்க ளுக்கு அதிக லாபம் வந்துள்ளதாக ஸ்கிரீன் ஷாட் படங்களை பதிவிட்டுள்ளனர். இதனை உண்மை என நம்பிய தியாகராஜன் வாட்ஸ் அப் குழுவில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தானும், பங்கு சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என  கேட்டுள்ளார். இதையடுத்து மறுமுனையில் பேசிய  அடையாளம் தெரியாத நபர் கூறியவாறு செல்போன் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் கடந்த  ஆகஸ்ட் 1 முதல் 19 ஆம் தேதி வரை ரூ.65.51 லட்சம் முத லீடு செய்துள்ளார். ஆனால் அவர்கள் கூறியவாறு லாபம்  வராமல் இருந்ததால் சந்தேகமடைந்த தியாகராஜன் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித் தார். இதேபோல் கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் தனது முகநூல் பக்கத் தில் வந்த விளம்பரத்தை பார்த்து ஆன்லைன் மூலம் பங்கு வர்த்தகம் செய்ய ரூ.46.65 லட்சத்தை முதலீடு செய்தார். ஆனால் அடையாளம் தெரியாத நபர்கள் கூறி யவாறு லாபம் வராததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த  கார்த்திகேயன் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகார்கள் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் மற்றும் செய லிகள் மூலம் இம்மாதிரி பல்வேறு பண மோசடி நடப்ப தாக போலீசார் எச்சரித்து வரும் நிலையில், மீண்டும்  கோவையை சேர்ந்த இருவர் ரூ.1.12 கோடி இழந்திருப் பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிதி உதவி

திருப்பூர், செப். 29- விபத்தில் உயிரிழந்தவர் களின் வாரிசுதாரர்க ளுக்கு மாவட்ட ஆட்சியர்  காசோலையை வழங்கி னார். திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் திங் களன்று பல்லடத்தில் கண் டெய்னர் விபத்தில் பலியான  இரு பெண்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு முதல மைச்சரின் பொது  நிவாரண நிதியின் கீழ் தலா ரூ.3 லட்சத்திற்கான காசோ லையை மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே வழங்கி னார். இதில் மாவட்ட வரு வாய் அதிகாரி கார்த்தி கேயன், ஆட்சியரின் நேர் முக உதவியாளர் மகாராஜ்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.