tamilnadu

img

ஆசிரியர்களை பாதுகாக்க வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்களை பாதுகாக்க வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்

தருமபுரி, அக்.16- ஆசிரியர் தகுதித்தேர்விலி ருந்து விலக்களித்து ஆசிரியர் களை பாதுகாக்க தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப் பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். 1.4.2003க்குப் பிறகு அரசுப்பணி யில் சேர்ந்தோருக்கு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்த வேண்டும். தொடக்க  கல்வித்துறையில் பணிபுரியும் 90  சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரி யர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத் தும் வகையில் வெளியிடப்பட் டுள்ள பள்ளிக்கல்வித்துறை அர சாணை எண்.243 நாள்: 21.12.2023ஐ  உடனடியாக ரத்து செய்ய வேண டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பா ளர்கள் எம்.சுருளி நாதன், பி.எம்.கெளரன், பாஸ்கர், ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் தமி ழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட் டணி மாநிலத் தலைவர் கோ.காம ராஜ், ஜாக்டோ - ஜியோ நிதி காப்பா ளர் கே.புகழேந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு இதேபோன்று, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ச.விஜயமனோகரன், பி.சரவணன், பி.எஸ்.வீராகார்த்திக், அ.மதியழ கன், அ.ஆறுமுகம் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு  அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டார். ஈரோடு, தாளவாடி, சத்தி, கோபி, பெருந்துறை உள் ளிட்ட அனைத்து வட்டாட்சியர் அலு வலக வளாகங்களிலும் மாலை  நேர ஆர்ப்பாட்டங்கள் நடைபெற் றது. முன்னதாக, கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட னர்.  கோவை கோவை மாவட்டம் முழுவதும் 7  வட்ட தலைநகரங்களில் சுமார்  1,500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்,  அரசு ஊழியர்கள், பணியாளர்கள் ஆகியோர் கோரிக்கை அட்டையு டன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரி யர் கழகம் மாவட்டச் செயலாளர் வேல்ராஜ் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ  ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பா ளர்கள் ச.ஜெகநாதன், சி.அரசு,  ராஜ சேகர், சாலமன் ராஜா, அரசு ஊழி யர்கள் சங்க மாவட்டச் செயலா ளர் செந்தில்குமார் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.