tamilnadu

img

மரவள்ளிக்கிழங்கு கொள்முதல் விலையை உயர்த்திடுக

மரவள்ளிக்கிழங்கு கொள்முதல் விலையை உயர்த்திடுக

விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

சேலம், அக்.8- மரவள்ளிக்கிழங்கு கொள் முதல் விலையை உயர்த்தி வழங் கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாநிலம் தழுவிய ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். மரவள்ளிக்கிழங்கு கொள் முதல் விலை வீழ்ச்சியிலிருந்து விவ சாயிகளை பாதுகாத்திட, மரவள் ளிக்கிழங்குக்கு குறைந்தபட்சம் டன்னுக்கு ரூபாய் 15,000 விலை  கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜவ்வரிசிக்கு மூட் டைக்கு ரூ.4,500, ஸ்டார்ச்சுக்கு ரூ.3500 என குறைந்தபட்ச விலை  நிர்ணயம் செய்திட வேண்டும். கூட் டுறவு நிறுவனத்தை பாதுகாத்த லின் வகையில் உயர்நீதிமன்ற வழி காட்டுதல்படி சேகோ சார் மூலம் ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் வணிகம்  செய்திட நடவடிக்கை எடுக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தினர் புதனன்று தமிழ் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்ஒருபகுதியாக சேலம் கோட்டை மைதானத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத் தின் மாவட்டத் தலைவர் அன்பழ கன் தலைமை வகித்தார். இதில், தமி ழக அரசு தொடர்ந்து மரவள்ளிக் கிழங்கு விவசாயிகளுக்கு முறை யான அறிவிப்பு வெளியிடாமல்  விவசாயிகள் தற்கொலைக்கு தூண் டும் வகையில் பாதிப்பை ஏற்படுத்து வதாக மாவட்டச் செயலாளர் ராம மூர்த்தி குற்றச்சாட்டினார். இதில்,  ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின்  தலைவர் அரங்க சங்கரய்யா, தமிழ் நாடு பால் உற்பத்தியாளர் சங்க  மாவட்டச் செயலாளர் பி.அரியாக் கவுண்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் நாமக்கல் மாவட்டம், நாமகிரிப் பேட்டை ஒன்றியக்குழு சார்பில், மெட்டாலா பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.  ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்  ஆர்.செந்தில்குமார் தலைமை வகித் தார். சங்கத்தின் நிர்வாகிகள் ஏ.பழ னிச்சாமி எஸ்.சுப்பிரமணி வெங்க டாஜலம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநிலச் செய லாளர் பி.பெருமாள், இந்திய மாண வர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், அகில இந் திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் வி.பி.சபா பதி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே. சின்னசாமி ஆகியோர் பேசினர். ஒன் றிய நிர்வாகி எம்.குமரேசன் நன்றி  கூறினார்.  தருமபுரி தருமபுரி மாவட்டம், அரூர்  கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்டத் தலைவர் எம்.குமார்  தலைமை வகித்தார். இதில் மாவட் டச் செயலாளர் சோ.அருச்சுனன், பொருளாளர் சி.வஞ்சி, மாவட்ட துணைத்தலைவர்கள் கே.என். மல்லையன், எஸ்.தீர்த்தகிரி, ஏ.நேரு, மாவட்ட துணைச்செயலா ளர்கள் கே.அன்பு, ஆ.ஜீவானந்தம்,  பி.சக்கரவேல், ஆர்.சின்னசாமி, வட்ட நிர்வாகிகள் எஸ்.கே.கோவிந் தன், மனோகரன், இராமலிங்கம், பொன்னுசாமி, டி.சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.