tamilnadu

img

சிறுமிகள் கருத்தரித்தல் விகிதம் அதிகரிப்பு: மாதர் சங்கம் கவலை

சிறுமிகள் கருத்தரித்தல் விகிதம் அதிகரிப்பு: மாதர் சங்கம் கவலை

தருமபுரி, ஆக.23- சிறுமிகள் கருத்தரித்தல் விகி தம் அதிகரித்து வருவது கவலை யளிப்பதாக உள்ளது எனவும், இதற் கெதிரான விழிப்புணர்வு நடவடிக் கையை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் என மாதர் சங்க தருமபுரி மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள் ளது.  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தருமபுரி மாவட்ட 13  ஆவது மாநாடு ஆக.22,23 ஆகிய  தேதிகளில் அரூரில் நடைபெற்றது. அக்.22 ஆம் தேதியன்று பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, சனியன்று நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டிற்கு, மாவட் டத் தலைவர் ஏ.ஜெயா, துணைச் செயலாளர் எஸ்.தனலட்சுமி, துணைத் தலைவர் எஸ்.தமிழ்மணி ஆகி யோர் தலைமை வகித்தனர். சங்க  கொடியை வாச்சாத்தி பாரந்தாயி ஏற்றி வைத்தார். துணைச்செயலா ளர் எஸ்.நிர்மலா ராணி அஞ்சலி தீர் மானத்தை வாசித்தார். வரவேற்புக் குழு தலைவர் ஜி.தமிழ்செல்வி வர வேற்றார். அகில இந்திய துணைத் தலைவர் பி.சுகந்தி துவக்கவுரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் ஆர்.மல்லிகா, பொருளாளர் எம். வளர்மதி ஆகியோர் அறிக்கைகளை  முன்வைத்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.பவித்ரா தேவி வாழ்த்திப் பேசினார்.  இதில், தமிழ்நாட்டில் பரவலாக நடைபெற்று வரும் சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண் டும். பாலியல் வன்கொடுமை வழக் குகளில் குற்றவாளி மீது கடும் நட வடிக்கை எடுத்து, பாதிக்கப் பட்ட குடும்பத்திற்கு அரசு நிதி வழங்கி பாதுகாக்க வேண்டும். தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயர்தர சிறப்பு சிகிச்சை பிரிவுகள் தொடங்க வேண்டும். விண்ணப்பித்த தகுதி யுள்ள அனைவருக்கும், மகளிர்  உரிமைத்தொகை வழங்க வேண் டும். சிறுமிகள் கருத்தரித்தல் விகி தத்தைக் குறைத்திட விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின்  மாவட்டத் தலைவராக ஏ.ஜெயா,  செயலாளராக ஆர்.மல்லிகா, பொரு ளாளராக சரண்யா, துணைத்தலை வர்களாக எஸ்.தமிழ்மணி, எஸ். நிர்மலா ராணி, துணைச்செயலா ளர்களாக எஸ்.தனலட்சுமி, வளர் மதி உட்பட 21 பேர் கொண்ட மாவட் டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநில பொதுச்செயலாளர் ஏ. ராதிகா நிறைவுரையாற்றினார். சரண்யா நன்றி கூறினார்.

அகில இந்திய துணைத்தலைவர் பி.சுகந்தி பேசுகையில், பெண்கள் மீதான வன்கொடுமைகள் கடந்த 10 ஆண்டு காலத்தில் 93 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக ஒன்றிய அரசின் புள்ளிவிபரம் சொல் கிறது. மோடி அரசின் மோசமான பொருளாதார கொள்கையால் உழைக்கும் பெண்கள் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன் சமையல் எரியாயு சிலிண்டர் விலை  ரூ.450 ஆக இருந்தது. தற்போது ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சமையல் பொருட்களின் விலை யும் கடுமையாக உயர்ந்துள்ளது. மோடி அரசு தோல்வியை மறைப்பதற்காக, தற்போது கொண்டு வந்துள்ள மசோதா, 30 நாட்கள் சிறையில் இருந்தால் அமைச்சரோ, முதல்வரோ, பிரதமரோ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மக்கள் பிரதிநிதிகளாக இருக்க முடியாது என மசோதா கொண்டு வந்துள்ள னர். பீகார் மாநிலத்தில் வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளனர். 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியுள்ள னர். தனக்கு தேவை என்பதற்காக ஒரே குடும்பத்தில் 165 வாக்காளர்களை இணைத்துள்ளனர். இந்தியா வில் ஈடி, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையத்தைபயன்படுத்தி எதிர்க்கட்சிகளை ஒடுக்குகின்ற னர். மோடி அரசின் மோசமான கொள்கையை எதிர்த்து மாதர் சங்கம் தொடர்ந்து போராட்டம் நடத்தும், என்றார்.

மாநில பொதுச்செயலாளர் ஏ.ராதிகா பேசுகையில், தமிழ்நாட்டில் சாதி ஆணவப்படுகொலை அதிகரித்து வருகிறது. மேலும், வரதட் சனை கொடுமையால் பெண்கள் தற்கொலை செய்யும் நிகழ்வும்  அதிகரித்து வருகிறது. உரிய சட்டம் இருந்தும் வழக்குகள் முறையாக பதிவு செய்வதில்லை; உரிய விசாரணை செய்வதில்லை. குற்ற வாளிகள் எளிதாக தப்பி விடுகின்றனர். எனவே, வரதட்சணை கொடு மைக்கு எதிரான சட்டங்களை குற்றவாளிகள் மீது பதிந்து உரிய  தண்டனை பெற்று தர வேண்டும். வருவாய்த்துறை, காவல் துறை,  வனத்துறை அதிகாரிகளால் சூறையாடப்பட்ட வாச்சாத்தி கிராமத் தின் கட்டமைப்பு மேம்பாட்டிற்கும், மக்களின் பொருளாதார மேம்பாட் டிற்கு தமிழக அரசு உரிய நிதி ஒதுக்க வேண்டும், என்றார்.