நிறுத்தப்பட்ட குழு காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்திடுக ஏகாதிபத்திய
எதிர்ப்பு நாளில் விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், செப்.1- ஒன்றிய அரசு நிறுத்திய குழு காப்பீட்டு திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும் என வலியுறுத்தி, ஏகாதிபத்திய எதிர்ப்பு நாளில் விசைத்தறி தொழிலாளர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செப்.1 உலக ஏகாதிபத்திய எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப்பட் டுள்ள நிலையில், அமெரிக்காவின் வர்த்தகப் போருக்கு எதிராகவும், பாலஸ்தீனம், சூடான் போன்ற நாடு களில் உள்ள போரை உலக சமூ கம் தடுத்து நிறுத்த வேண்டும். ஏகா திபத்திய எதிர்ப்பு உணர்வை மேலோங்க செய்யவும், உலக சமா தானத்தை பாதுகாக்க வேண்டும். தொழிலாளர் நலனுக்கு விரோத மான நான்கு சட்ட தொகுப்புகளை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண் டும். நிறுத்தப்பட்ட விசைத்தறித் தொழிலாளிகளுக்கான குழு காப் பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண் டும். அறிவிக்கப்படாத வேலை இழப் பிற்கு சம்பளம் வழங்க வேண்டும். விசைத்தறி தொழிலாளர்களுக்கு 75 சதவிகித கூலி உயர்வு வழங்க வேண்டும். கட்டுமான வாரியத்தில் வழங்கப்படும் சலுகைகள் போல், விசைத்தறி தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். ஜிஎஸ்டி-யை குறைக்க வேண்டும். தமிழக பருத் திக் கழகம், ஜவுளி சந்தை அமைத்து விசைத்தறி தொழில், தொழிலாளர் களை பாதுகாக்க வேண்டும், உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு விசைத்தறி தொழி லாளர் சங்கத்தினர் ஞாயிறு மற்றும் திங்களன்று மாநிலம் தழுவிய ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்ஒருபகுதியாக நாமக்கல் மாவட்டத்தில் 3 இடங்களில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. அதன்படி, திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் தலைவர் ராம ஜெயம் தலைமை வகித்தார். மாநி லக்குழு உறுப்பினர் முருகேசன், துணைத்தலைவர் வீரமணி, சிபிஎம் நகரச் செயலாளர் சீனிவாசன், தையல் சங்க மாவட்டப் பொருளா ளர் ராயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளிபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங் கத்தின் ஒன்றியத் தலைவர் முத்துக் குமார் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே. மோகன், ஒன்றியச் செயலாளர் கே. குமார், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் நவீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குமாரபாளை யம் ஆனங்கூர் பிரிவு சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங் கத்தின் நகரத் தலைவர் வெங்கடே சன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர்கள் கே.பாலுசாமி, பி.முருகேசன், மாவட்டச் செயலா ளர் எம்.அசோகன் உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர்.
