தெருக்களில் சாதிப்பெயர்களை மாற்றுவது குறித்து கிராமசபையில் விவாதிக்க முடிவு
திருப்பூர், அக். 3 – தமிழக அரசின் முடிவுப்படி சாதிப்பெயர் கொண்ட குக்கி ராமங்கள், சாலைகள் மற்றும் வீதிகளின் பெயர் மாற்றம் குறித்து அக்டோபர் 11ஆம் தேதி கிராமசபைக் கூட்டங்களில் விவாதிக்கப்பட உள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார். இது குறித்து ஆட்சியர் மனிஷ் நாரணவரே வெள்ளி யன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது: திருப்பூர் மாவட்டத்திலுள்ள 265 கிராம ஊராட்சிகளி லும், அக்டோபர் 11 சனியன்று காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெறும். இக்கூட்டங்களில், கிராம மக்களின் மூன்று அத்தியாவசியத் தேவைகளை தேர்வு செய்து ஒப்புதல் பெறுவது, சாதிப் பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள், சாலை கள் மற்றும் தெருக்கள் பெயரை மாற்றுதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு, வடகிழக்கு பருவமழை முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம். அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – II உள்ளிட்ட பொருட் கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. பொது மக்கள் மேற்படி கிராம சபைக் கூட்டத் தில் கலந்து கொண்டு இந்த பொருள்கள் மற்றும் ஊராட்சி களின் வளர்ச்சிக்காக ஆலோசனைகள் குறித்து விவாதிக்கு மாறு ஆட்சியர் மனிஷ் நாரணவரே கேட்டுக் கொண்டுள் ளார்.
பட்டாவிற்கான இடத்தை அளந்து தரக் கோரி போராட்டம் திருப்பூர், அக்.3- திருப்பூர் ஒன்றியம், அவிநாசி வட்டம் காளிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட வாரணாசிபாளையத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவுக்கான இடத்தை அளந்து தரக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். காளிபாளையம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி மக்கள் 27 பேருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அப்பகுதி மக்கள், பட்டா இடத்தை அளவீடு செய்து தரக்கோரி வெள்ளியன்று பட்டா வழங்கப்பட்ட நிலத் தில் குடியேற முயன்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் முன்னிலையில். வருவாய் துறையி னர், அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மாற்றுத்தரப்பினர், தங்களது மயானத்திற்கு அருகே பட்டா வழங்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர். இதற்கு ஆட்சேபனை தெரிவித்த பட்டியலின மக்கள், தற்போது பட்டா வழங்கப்பட்டுள்ள அதே இடத்தி லேயே அளவீடு செய்து குடியேற வழிவகை செய்து தர வேண்டும் என வலியுறுத்தினர்.
அவிநாசியில் இன்று மின்தடை திருப்பூர், அக்.3- அவிநாசி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராம ரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கீழ்க்கண்ட பகுதிக ளில் சனிக்கிழமை (அக்டோபா் 4) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியத் தினர் தெரிவித்துள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகள்: அவிநாசி, வேலாயுதம்பா ளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பிய நல்லூர், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டு வபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துசெட்டிபாளை யம், காமராஜ் நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூர் சாலை, வஉசி காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், அவிநாசி கைகாட்டிபுதூர், சக்தி நகர், ராயம்பாளையம், எஸ். பி.அப்பேரல், குமரன் காலனி, ராக்கியாபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.
அக்.11 உடுமலையில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி உடுமலை அக்.3- திருப்பூர் மாவட்ட அளவிலான சைலாத் சிலம்பச் சங்கம் நடத்தும் 5ஆவது மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகள் வரும் அக்.11 ஆம் தேதி சனிக்கிழமை உடுமலையில் நடை பெற உள்ளது. பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் கல்ச்சு ரல் சாரிட்டபிள் டிரஸ்ட், திருப்பூர் மாவட்ட சைலாத் சிலம்பச் சங்கம் மற்றும் லெட்டினட் சுபாஷ் ரேணுகாதேவி நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தும் 5 ஆவது மாவட்ட அளவி லான சிலம்பப் போட்டிகள் பொள்ளாச்சி சாலையில் உள்ள லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி நினைவு அறக்கட்டளை வளாகத்தில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சைலாத் சிலம்ப சங்கம், பகத்சிங் களரி மார்ஷியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை பயிற்சியாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர்.
வடமாநிலங்களில் கடும் மழையால் திருப்பூர் உள்நாட்டு ஆடைகளுக்கு பாதிப்பு
திருப்பூர், அக். 3 – வட மாநிலங்களில் தென் மேற்குப் பருவ மழை மிகக்கடுமையான பாதிப்பு ஏற்படுத் திய நிலையில், திருப்பூரில் இருந்து பண் டிகை கால உள்நாட்டு ஆடைகள் விற்ப னைக்கு செல்வது சற்று பாதிக்கப்பட்டிருப் பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். திருப்பூரில் இருந்து பின்னலாடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவது தவிர, உள்நாட்டு சந்தைக்கும் கணிசமான ஆடை கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு செல்கி றது. குறிப்பாக இங்கிருந்து கேரளம், கர்நாட கம், ஆந்திரம் உள்ளிட்ட தென் மாநிலங்க ளுக்கு மட்டுமின்றி டில்லி, மும்பை, கல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களை மையப்படுத் திய சந்தைகளுக்கும் ஆடைகள் அனுப்பப்ப டுகின்றன. வழக்கமாக தீபாவளி பண்டிகைக்கு என்று உள்நாட்டு ஆடைகள் உற்பத்தி செய் யப்பட்டு ஓரிரு மாதங்களுக்கு முன்பாக அங் குள்ள சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்ப டும். ஆனால் செப்டம்பர் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை வட மாநிலங்களில் மிகக் கடுமையாக பெய்தது. பல ஆறுகளில் வரலாறு காணாத அளவுக்கு அபாயக்கட் டத்தை தாண்டி வெள்ளப் பெருக்கு ஏற்பட் டது. டில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களும் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன. எனவே வழக்கமான காலத்தில் இங்கி ருந்து செல்லக்கூடிய ஆடைகளை டில்லி, மும்பை வியாபாரிகள் கொள்முதல் செய்வது தாமதம் ஆனது. ஏற்கெனவே உற்பத்தி செய் யப்பட்ட ஆடைகள் தற்போது தாமதமாக அனுப்பி வைக்கப்படுகின்றன என்று திருப் பூர் உற்பத்தியாளர்கள் கூறினர். குழந்தைகளுக்கான ஆடைகள் உற்பத்தி செய்யும் குணசேகரன் என்பவர் கூறுகையில் ஏற்கெனவே சில வாரங்களுக்கு முன்பே அனுப்பி வைக்க வேண்டிய சரக்குகள் இன்னும் தேங்கியிருக்கின்றன. தற்போது தான் எங்களது வாடிக்கையாளர்கள் ஒவ் வொருவராக, சரக்குகளை அனுப்பி வைக் கும்படி கேட்கின்றனர் என்று கூறினார். இது போல் பெண்கள், இளைஞர்களுக் கான டி சர்ட், சார்ட்ஸ் மற்றும் உள்ளாடை கள் ரகங்களும் வட மாநிலங்களுக்குச் செல் வது சற்று குறைந்திருப்பதாகத் தெரிவித்த னர். இது குறித்து சைமா தலைவர் சண்முகசுந்தரத்திடம் கேட்டபோது, இம் முறை சீசன் தாமதமாக தொடங்கியுள்ளது. மழை காரணமாக இங்கிருந்து சரக்குகளை அனுப்புவதில் தாமதமாகியிருப்பதுடன், போக்குவரத்திலும் இரண்டு நாட்கள் வரை கூடுதலாக தாமதமாகும். எனினும் விற்பனை யில் பாதிப்பு இருக்குமா என்று இப்போது கணித்துச் சொல்ல முடியாது. தீபாவளி முடிந்த பிறகுதான் அது பற்றிய விபரம் தெரி யவரும். அதேசமயம் ஜிஎஸ்டி குறைப்பி னால் விற்பனை அதிகரிக்கலாம். பனியன் உள்ளிட்ட பின்னலாடைகளுக்கு உரிய ஜிஎஸ்டி மாற்றமில்லாமல் இருந்தாலும், மக்கள் பயன்படுத்தும் இதர பொருட்க ளுக்கான ஜிஎஸ்டி குறையும்போது, ஆடை கள் வாங்குவதில் செலவிடக் கூடிய வாய்ப்பு உள்ளது என்று சண்முகசுந்தரம் தெரி வித்தார்.