அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை மாநாடு
தருமபுரி செப்-6, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை மாநாடு வலியுறுத்தியுள் ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தரும புரி மாவட்ட, நல்லம்பள்ளி வட்ட 16- ஆவது மாநாடு நல்லம்பள்ளியில் சனியன்று நடை பெற்றது. ஒன்றியத் தலைவர் வி. மணி வேந் தன் தலைமை வகித்தார். மாவட்டத் தலை வர் எம். சுருளிநாதான் துவக்கி வைத்து பேசி னார். வட்ட செயலாளர் பெ. மகேஸ்வரி வேலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் எஸ். தினமணி வரவு செலவு கணக்கை சமர் பித்தார். ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத் தின் மாநில துணைத்தலைவர் சா.இளங்கும ரன், ஜாக்டோ ஜியோ நிதி காப்பாளர் கே.புக ழேந்தி, அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொரு ளாளர் எம். அன்பழகன், சததுணவு ஊழியர் சங்க ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்டச் செயலாளர் சி.காவேரி ஆகியோர் வாழ்த்தி பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் ஏ. தெய்வானை நிறைவுறை யாற்றினார். இதில், தொகுப்பூதியம், மதிப்பூதியம், அவுட்சோர்சிங், காண்ட்ராக்ட் பணி நியமன முறையை கைவிட்டு நிரந்த பணியில் நிய மிக்கவேண்டும். அனைவருக்கும் தேர்தல் கால வாக்குறுதிப்படி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.