tamilnadu

img

எரிவாயு தகன மேடை திட்டம்: நிலம் கையகப்படுத்த வந்த அதிகாரிகளை தடுத்து பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம்

எரிவாயு தகன மேடை திட்டம்: நிலம் கையகப்படுத்த வந்த அதிகாரிகளை தடுத்து பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம்

நாமக்கல், செப்.10- திருச்செங்கோடு அருகே எரிவாயு தகன மேடை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த வந்த அதிகாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி, ஊராட்சி  ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப் புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோட்டை அடுத்த மொளசி முனியப்பன் பாளையம் பகுதியில் எரிவாயு தகன  மேடை அமைக்க திட்டமிடப்பட்டுள் ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், எரிவாயு தகன மேடைக்கு செல்லும் வழியில் உள்ள நிலத்தை ஆக்கிரமிப்பு எனக்கூறி அதி காரிகள் ஜேசிபி எந்திரம் கொண்டு வழித் தடம் உருவாக்க முயற்சி செய்தனர்.  இதனையறிந்த அப்பகுதியிலுள்ள கரும்பு தோட்டத்தைச் சேர்ந்த விவ சாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள், எரி வாயு தகன மேடை அமைத்தால் தங்க ளது கரும்பு தோட்டத்திற்கு பாதுகாப்பு இருக்காது; கரும்பு தோட்டத்தில் வேலை செய்ய வருபவர்களுக்கு பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது; இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பச்சாம்பாளையம் பகுதியில் எரிவாயு தகன மேடை இருக்கும்போது அரசு எந்திரத்தை பயன்படுத்தி எங்களை மிரட்டி வேண்டுமென்றே இங்கு எரி வாயு தகன மேடை அமைக்க முயற்சி  செய்கிறார்கள் எனக்கூறி, அதிகாரி களை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த திருச் செங்கோடு வட்டாட்சியர் கிருஷ்ண வேணி, பொதுப்பணித்துறை உதவி  செயற்பொறியாளர் சாந்தி, வருவாய்  அலுவலர் பிரியா, கிராம நிர்வாக  அலுவலர் குணசேகரன், பள்ளிபாளை யம் காவல் ஆய்வாளர் சிவகுமார், மொளசி உதவி ஆய்வாளர் சதீஷ் ஆகி யோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். இதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், 500  மீட்டர் தொலைவு கொண்ட அப்பாதை யில், 100 மீட்டர் நீளம் மட்டுமே பாதை அமைக்க மண் தோண்டப்பட்டு, மீதி யுள்ள இடம் தோண்ட முடியாமல் அதி காரிகள் திரும்பி சென்றனர். இந்நிலை யில், அரசு அதிகாரிகளை பணி செய்ய  விடாமல் தடுத்ததாக 8 பேர் மீது திருச் செங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை கண்டித் தும், பட்டா நிலத்திற்குள் மயானத்திற்கு  செல்ல பாதை அமைக்கக்கூடாது என  வலியுறுத்தி புதனன்று திருச்செங்கோடு  ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப் புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில், ஆற்றங்கரையில் எரிவாயு தகன மேடை திட்டம் தொடங்கி, இன்று வரை பல்வேறு புகார் மனுக்களை நாங்கள் தொடர்ந்து  கொடுத்து வருகிறோம். எங்களுக்கு இந்த எரிவாயு தகன மேடை தேவை யில்லை. அவ்வழியாக சடலங்களை கொண்டு வரும்போது, பட்டாசு வெடித்தாலோ, வேறு எங்காவது இருந்து சடலங்களை கொண்டு வரு வாரோல் எங்களுக்கு எந்த வித மான பாதுகாப்பும் இருக்காது. எங்க ளுடைய விவசாய நிலத்தின் வழியாக உள்ள தடத்தின் வழியாக பாதை அமைக்க வேண்டாம் என பலமுறை எடுத்துக்கூறியும், அடாவடியாக எங்க ளது பட்டா நிலத்தை எடுத்துக் கொள்ள  முயற்சி செய்யும்போது, அதனை தட்டி  கேட்டு அவர்களை பணி செய்ய கூடாது  என தடுத்தோம். அதற்காக காவல் துறை யினர் எங்களை அச்சுறுத்தும் வகையில்  நடந்து கொள்கின்றனர் என குற்றஞ் சாட்டினர்.